சுந்தர் சி அரண்மனை-3 எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்.. ஆர்யாவுக்கு இதுதான் கடைசி

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, நளினி மைனா நந்தினி, யோகி பாபு, மனோபாலா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் தான் அரண்மனை 3. ஆயுதபூஜையை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் எப்படி உளள்து? இப்படத்திற்கு ரசிகர்கள் என்ன விமர்சனம் கொடுத்துள்ளார்கள் என்பதை தான் பார்க்க போகிறோம்.

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பின்னர் ஆர்யா நடிப்பில் தியேட்டரில் வெளியான படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கும். காரணம் படத்தில் ஆர்யா ஹீரோவா அல்லது கெஸ்ட் ரோலா என்பது தெரியவில்லை. அவ்வபோது மட்டும் தலை காட்டியுள்ளார்.

அதேபோல் படத்தின் கதையும் ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்து போன ஒன்றுதான். சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே வெளியான அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களையும் ஒன்றாக சேர்த்து இந்த பாகத்தை எடுத்துள்ளார். நடிகர்களில் மட்டும் கொஞ்சம் மாற்றம் செய்துள்ளார் அவ்வளவு தான்.

சுந்தர் சி படங்களில் கதை மொக்கையாக இருந்தாலும் காமெடி ஓரளவிற்கு ரசிக்கும் விதமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் யோகி பாபு, நந்தினி, நளினி, மனோபாலா என ஒரு கூட்டமே இருந்தும் காமெடி ரசிக்கும்படி இல்லை. சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளார்கள். ஆர்யா தான் ஹீரோ என கூறி வழக்கும்போல சுந்தர் சி தான் அனைத்து ஹீரோயிசத்தையும் செய்துள்ளார்.

அதிலும் ரசிகர் ஒருவர் தயவுசெய்து சுந்தர் சியுடன் படம் நடிக்காதீர்கள், தனியா நடித்து வாங்கிய பெயர் இது போன்ற கதைகளின் மூலம் போய் விடும் என்பது போன்ற பதிவை வெளியிட்டு ரசிகர்களை  ஷாக்காகி உள்ளார்.

அரைத்த மாவையே திரும்ப அரைத்து அதை தியேட்டரில் விட்டுள்ளது தான் சுந்தர் சி யின் திறமை. இந்த குறைகளை எல்லாம் பார்க்காமல் ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஓரளவிற்கு படத்தை ரசிக்கலாம். மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்பதுதான் ரசிகர்களின் பரவலான கருத்தாக உள்ளது.