விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது ஐந்து வாரத்தை நிறைவடைந்த தற்போது ஆறாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று நோமினேஷன் லிஸ்ட் வெளியாகும்.

அந்த வகையில் இந்த வாரத்தில் ராஜு, அக்ஷரா, சிபி, அபினை, பாவனி, மதுமிதா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளன. இதில் ராஜுவை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் மாறிமாறி நாமினேட் செய்தனர்.

அதேபோன்று ராஜு தொடக்க நாளிலிருந்தே என்டர்டைன்மென்ட் மட்டுமே செய்து ரசிகர்களை பிடித்தமான போட்டியாளராக இருக்கிறார். ஆகையால் ராஜுவை பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிக ஓட்டுக்களை குத்தி நாமினேட் வெளியில் இருக்கும் ரசிகர்கள் நிச்சயம் காப்பாற்றி விடுவார்கள்.

ஆனால் கடந்த ஐந்து வாரங்களாக தொடர்ந்து நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்று கடைசி நிமிடம் காப்பாற்றப்படும் அபினை இன் நிலைமைதான் கவலைக்கிடமாக இருக்கிறது.

ஏனென்றால் கடந்த வாரம் கூட சுருதி எலிமினேட் செய்தபோது, அபினை கடைசியாக காப்பாற்றப்பட்டார். இவ்வாறுதான் தொடர்ந்து ஐந்து வாரமும் நிகழ்வதால் ஆறாவது வாரம் அபினை சிக்குவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

இதை மனதில் வைத்துதான் அபினை கேப்டன் போட்டியில் வெற்றி பெற்ற கேப்டனாக ஆகும் தருணத்தில் இசைவாணி தன்னுடைய நாணயத்தை பயன்படுத்தி அவர் கேப்டனாக மாறிவிட்டார்.