சீரியல் வரலாற்றிலேயே புதுமையை கண்டுபிடித்த விஜய் டிவி.. இது என்ன புது உருட்டா இருக்கு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முத்தழகு என்ற சீரியல் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல்  ஆரம்பகட்ட ப்ரோமோவில் கிராபிக்ஸ் காளை மாடுகளை வைத்து பல விமர்சனங்களை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து இந்த சீரியலில் எந்த பரபரப்பும், விறுவிறுப்பும் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் இந்த சீரியலுக்கு ரசிகர்களின் வரவேற்பும் மிகவும் குறைவாக இருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவியில் பல சீரியல்கள் டிஆர்பியில் பின்னடைவை சந்தித்து வருகிறது.

அதில் முத்தழகு சீரியலுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் தற்போது இந்த சீரியலை விறுவிறுப்பாக்கும் முயற்சியில் இயக்குனர் இருக்கிறார். இதனால் அவர் இதுவரை எந்தத் சீரியலிலும் இல்லாத புதுமையான ஒரு லாஜிக்கை சீரியலில் கொண்டு வந்துள்ளார்.

ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் விருப்பம் இல்லாமல் திருமணம் நடைபெறுகிறது. இதனால் அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஹீரோவின் பாட்டி இருக்கிறார். அதற்காக அவர் பழைய சினிமா பாணியில் ஒரு லாஜிக்கை கண்டுபிடிக்கிறார்.

அதாவது முத்தழகு வரும் வழியில் ஒரு முள்ளை போட்டு விடுகிறார். இதனால் காலில் முள் குத்திய முத்தழகை ஹீரோ தூக்கிக் கொண்டு செல்வார் என்று அவர் எதிர்பார்க்கிறார். இப்படி பாட்டி ஒன்றை எதிர்பார்க்க அங்கு நடந்ததோ வேறு. எதிர்பாராத விதமாக முள் ஹீரோவின் காலை பதம் பார்க்கிறது. இதனால் ஹீரோயின் ரொம்பவும் பதறி போகிறார்.

அங்குதான் டைரக்டர் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார். முள் குத்தியதால் வலியில் இருக்கும் தன் கணவனை ஹீரோயின் முத்தழகு அலேக்காக தூக்கி விடுகிறார். அதோடு இல்லாமல் அவரை தூக்கிக்கொண்டு மலை மீது இருக்கும் கோவிலுக்கு ஏறுகிறார்.

இந்த ப்ரோமோ தற்போது மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு மொக்கை லாஜிக்கை யோசித்த இயக்குனரை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். தமிழ் சீரியல் வரலாற்றிலேயே ஹீரோவைத் தூக்கிய ஹீரோயின் நம்ம முத்தழகாகத் தான் இருக்கும். முழு உருட்டு வீடியோ பார்க்க