சீரியல்களில் ரவுண்ட் கட்டும் தல அஜித்தின் கதாநாயகி.. பொசுங்கும் சகநடிகைகள்!

தமிழ் சினிமாவிற்கு 1995 ஆம் ஆண்டு இளையதளபதி விஜய்யும், தல அஜித்தும் இணைந்து நடித்த படம்தான் ‘ராஜாவின் பார்வையிலே’. இந்த படத்தில் தல அஜித்துக்கு கதாநாயகியாக நடித்திருப்பவர் தான், இப்போது சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை காயத்ரி சாஸ்திரி. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஐந்து மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காயத்ரி, சீரியல்களிலும் நடிப்பதில் ஆர்வம் கொண்டார்.

இவர் வள்ளி படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சய் என்பவரின் சொந்த தங்கச்சி. கர்நாடகத்தில் பிறந்த காயத்ரி தன்னுடைய அண்ணனைப் பார்க்க சென்னை வரும் பொழுதுதான், ‘பாசமலர்’ சீரியலின் இயக்குனர் சுரேஷ் மேனன் அவரைப் பார்த்துவிட்டு அந்த சீரியலில் அவரை நடிக்க வைத்துள்ளார்.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி என்ற பிரபலமான சீரியலில் காயத்ரி நடித்ததுதான் மூலம் அவருடைய வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்ட் ஆக மாறியது. தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் ரவுண்ட் கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை காயத்ரி.

இவர் சின்னத்திரை சீரியல் இயக்குனராக ரவி என்பவரை திருமணம் செய்துகொண்டு, குழந்தை பிறந்ததும் மூன்று வருடம் சீரியலில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். தற்போது மீண்டும் சன் டிவியின் ரோஜா என்ற பிரபலமான சீரியலில் கதாநாயகிக்கு மாமியாராக கல்பனா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் சின்னத்திரைக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவர் தற்போது சீரியல்களை பார்க்கும் குடும்பப் பெண்களின் வீட்டில் ஒரு அவராகவே மாறிவிட்டார். ஏனென்றால் இவர் நடிக்கும் சீரியல்களில் இவருடைய கதாபாத்திரம் தனித்துவத்துடன் பேசப்படும்.

தற்போது 39 வயதான காயத்ரி, நிஜ வாழ்க்கையில் அவருக்கு பள்ளி செல்லும் மகள் உள்ளார். தனது செல்ல மகளுடன் காயத்ரி எடுத்திருக்கும் புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.