சீரியலுக்கு முழுக்கு போட்ட விஜய் டிவி பிரபலம்.. பட பூஜையுடன் வைரலாகும் போஸ்டர்

வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சின்னத்திரையில் நுழையும் பிரபலங்கள் ஒரு கட்டத்தில் முன்னேறி சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெறுகின்றனர். அந்த வரிசையில் சிவகார்த்திகேயன், சந்தானம், யோகிபாபு போன்றோர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைத்திருக்கும் பிரபலங்கள் ஆகும்.

அந்த வரிசையில் தாமும் சேர வேண்டும் என்ற ஆசையில் சின்னத்திரையில் நீண்ட நாட்களாகவே சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பிரஜன், தற்போது சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

அந்த புது படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றிருக்கிறது. இந்த படத்தில் சங்கர்-கென்னடி ஆகிய இரண்டு பேர் இயக்கி, ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் ப்ரொடக்ஷன் சார்பில் எஸ்வி சூரியகாந்த் தயாரிக்கின்றார். பிரஜன் உடன் மற்றொரு கதாநாயகனாக ஆஜித் நடிக்கவுள்ளார். எனவே இந்தப் படத்திற்கு ராஷ்மி, பிரகயா நயன் உள்ளிட்ட இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

சமீபத்தில் பிரஜன் விஜய் டிவியில் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் சரண்யா உடன் ஜோடி சேர்ந்த நடித்துக் கொண்டிருந்தார். பிரஜன் இந்த சீரியலில் இருந்து விலகியதும் அவருக்கு பதில் முன்னா என்ற சீரியல் நடிகர் நடிக்கிறார்.

பிரஜன் வைதேகி காத்திருந்தாள் சீரியலில் நடிக்கிறார் என்பதற்காகவே ஒரு சில ரசிகர்கள் இந்த சீரியலை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் சென்ற பிறகு அந்த சீரியல் டல் அடிக்க தொடங்கிவிட்டது. இதை உணர்ந்த அந்த சீரியலின் கதாநாயகி சரண்யா விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் போலீஸ் அதிகாரியாக மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

ஆகையால் வைதேகி காத்திருந்தால் சீரியலில் பிரஜன் இல்லாவிட்டாலும் சினிமாவில் அவர் படம் நடிக்க கிளம்பி இருப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்படுகிறது. கூடிய விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்குகிறது.