சீரியலிருந்து கண்ணம்மா விலக காரணம் இது தான்.. ரோஷினி ஓபனாக பேசிய வைரல் வீடியோ!

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கின் முதலிடத்தை பிடிக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே பிடித்தமான சீரியலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பாரதிகண்ணம்மா சீரியலிருந்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஹரிப்ரியன் விலகியது ரசிகர்கள் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த அளவிற்கு கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிந்தார் ரோஷினி. தற்போது ரோஷினுக்கு பதில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் டிக் டாக் நடிகையும் மாடலுமான வினுஷா தேவி நடிக்கத் தொடங்கியுள்ளார்.

எனவே நேற்றைய எபிசோடில் முதல்முதலாக வினுஷா கண்ணம்மா கதாபாத்திரத்தில் காட்சியளித்தார். இந்த திடீர் மாற்றத்தை ரசிகர்கள் வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

எனவே ரோஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முதலாக கண்ணம்மா சீரியலிருந்து விலகியதை குறித்து ஓபனாக பேசி உள்ளார்.

கண்ணம்மா சீரியல் இருந்து ஒரு சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் விலகியதாகவும், இந்த அளவிற்கு ரோஷினி வளர்வதற்கு ரசிகர்கள் தான் காரணம் என்றும் இனியும் ரசிகர்களின் ஆதரவு தனக்கு வேண்டும் என்றும் அந்த வீடியோவில் ரோஷினி கேட்டுக்கொண்டுள்ளார்,

கண்ணம்மா சீரியலிருந்து விலகினாலும் ரோஷினி சோசியல் மீடியாவின் வாயிலாக கண்ணம்மா தன்னுடைய ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார் என்றும் நம்பப்படுகிறது.