சிவாஜி கணேசனிடம் சொன்ன வார்த்தையை காப்பாற்றிய ரஜினிகாந்த்.. தலைவர் எப்பவுமே தனி ரகம்தான்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் ரஜினிகாந்த் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். தற்போது படக்குழு இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் பொருத்தவரை சொன்ன வார்த்தையை காப்பாற்றுவார் என்பது பரவலாக பேசப்படும் உண்மை. அப்படித்தான் ஒரு காலத்தில் சிவாஜி கணேசனிடம் கூறிய வார்த்தையை சில வருடங்கள் பிறகு காப்பாற்றியதாக செய்திகள் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மன்னன் பட வெற்றி நிகழ்ச்சியின்போது ரஜினிகாந்த் சிவாஜி கணேசனை பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார்.

மேலும் சிவாஜி கணேசன் ரசிகனாகவும் அவர் படங்களை பார்த்து ரசித்துதாகவும் கூறியிருந்தார். மேலும் கண்டிப்பாக சில வருடங்களுக்கு பிறகு சிவாஜி புரொடக்ஷன்ஸ் ஒரு படம் நடிப்பேன் என கூறியிருந்தார். அதேபோல் சில வருடங்களுக்கு பிறகு சிவாஜி புரொடக்ஷன்ஸ் 50வது படமான சந்திரமுகி எனும் படத்தில் நடித்து சொன்ன வார்த்தையைக் காப்பாற்றினார்.

தற்போது இதனை அறிந்த ரஜினி ரசிகர்கள் தலைவர் எப்போதுமே தனி ரகம்தான் எனவும் இவருக்கு இணை இவர்தான் மகுடம் சூட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் எப்போதும் செய்வதை மட்டும் தான் சொல்வார் எனவும் கூறிவருகின்றனர். தற்போது இந்த செய்தி ரஜினி ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய 2ஆம் பாகம்.. அப்போதே உஷாராய் கணித்த செல்வராகவன்

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் கார்த்தி தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் அடுத்ததாக விருமன் படம் வெளியாக ...