சிவகுமாரின் சபதம் படம் வெற்றியா தோல்வியா? இதோ ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வருபவர் தான் ஹிப் ஹாப் ஆதி. மீசையை முறுக்கு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான ஆதி முதல் படத்திலேயே தன் நடிப்பு திறமையை காட்டி இளைஞர்களை தன்வசம் ஈர்த்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஆதி நடித்திருந்தார். இதில் இறுதியாக வெளிவந்த நான் சிரித்தால் படம் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. எனவே தனது அடுத்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என நினைத்த ஆதி அவரே இயக்கி நடிக்க முடிவு செய்தார்.

அதன் முடிவு தான் இன்று வெளியாகியுள்ள சிவகுமார் சபதம் படம். எப்போதும் புதிதாக யாருக்காவது வாய்ப்பளித்து வரும் ஆதி நட்பே துணை படத்தில் பல யூடியூபர்களுக்கு வாய்ப்பளித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது சிவகுமார் சபதம் படத்திலும் பிராங்க் ஸ்டார் ராகுலுக்கு வாய்ப்பளித்து காமெடியில் கலக்கி உள்ளார்.

மேலும் படம் பார்த்த ரசிகர்கள் அனைவருமே நீண்ட நாளுக்கு பின்னர் ஒரு பக்கா பேமிலி என்டர்டெயின்மெண்ட் படம் பார்த்த திருப்தி உள்ளதாக கூறி வருகின்றனர். இது தவிர ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் மட்டுமே தற்போது வரை கிடைத்து வருகிறது.

மேலும் ஒரு தரப்பினர் இப்படத்தை ஆதி 2கே கிட்ஸ்களுக்காக எடுத்துள்ளார் என்றும், இப்படம் மூலம் 2கே பேன்ஸ்களை சம்பாதித்து விட்டார் எனவும் கூறி வருகின்றனர். தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையேயான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ள சிவகுமார் சபதம் படம் இன்றைய தலைமுறையினருக்கு உறவுகள் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை எடுத்து கூறும் படமாக உள்ளது என புகழ்ந்து வருகிறார்கள்.