சிவகார்த்திகேயன் பாடிய 6 பாடல்கள்.. எல்லாமே மரண ஹிட், வேற லெவல்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் பாடியும் வருகிறார். இவர் பாடிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்: 2013இல் வெளியான இத்திரைப்படத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பாடலை பாடியிருப்பார். இப்படத்தில் இசையமைப்பாளர் டி இமான்.

மான் கராத்தே: 2014 வெளியான மான்கராத்தே திரைப்படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா நடித்திருப்பார்.’ ராயபுரம் பீட்டர் இந்த பாடலை பாடி இருப்பார். இப் பாடலை அனிருத் இசையமைத்து சிவகார்த்திகேயன் பாடியிருப்பார்.

காக்கி சட்டை: அனிருத் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்திருப்பார். சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்து இருப்பார். இத்திரைப்படத்தில் ‘ஐ அம் சோ கூல் என்ற பாடலை பாடி இருப்பார்.

ரஜினி முருகன்: ராஜ்கிரன், கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் நடித்த இத்திரைப்படத்தில் ‘ரஜினிமுருகன்’ பாடலை பாடியிருப்பார். இப்படத்தின் இசையமைப்பாளர் டி இமான்.

மாப்பிள்ளை சிங்கம்:விமல்,அஞ்சலி நடித்த படத்தில் என் ஆர் ரகுநாதன் இசை அமைத்திருப்பார். இதில் அவர் பாடிய பாடல் ‘எதுக்கு மச்சான் காதலு’.

லிப்ட்: பிக்பாஸ் பிரபலம் கவின் கதாநாயகனாக நடித்த திரைப்படம் லிப்ட். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘இன்னா மயிலு’ என்ற பாடலை பாடியுள்ளார். இப்பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டி இப்பாடல்
ஹிட்டாக உள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனத்தால் வடிவேலுக்கு வந்த பெரும் சோதனை.. ஒரு அடி எடுத்து வச்சா ரெண்டு அடி சறுக்குது

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பேச்சுவார்த்தை மூலம் ...