சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த நெல்சன்.. அவரு செஞ்சிருந்தா கூட சம்பவம் சிறப்பா இருந்திருக்கும்

தளபதி விஜய் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் பேட்டி கொடுத்துள்ளார். இது வருகிற 10ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட்.

எப்போதும் விஜய் படத்தின் ஆடியோ லான்ச் மிக பிரமாண்டமாக நடக்கும். ஆனால் பீஸ்ட் படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை என்பதால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் விஜய்யை பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பேட்டி எடுக்கிறார்.

இந்தப் பேட்டியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. அதில் விஜய் செஞ்சு வைச்ச சிலை போல் அப்படியே இருக்கிறார். அதில் ரோபோ போல் அவர் குரல் மட்டும் வருகிறது. அவரிடம் நெல்சன் ஏதும் தெரியாதது போல் சில கேள்விகளைக் கேட்கிறார்.

கடந்த தேர்தலில் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டது மிக சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை மனதில் வைத்துக்கொண்டு நெல்சன் அதான் 4 கார் இருக்கே ஏன் சைக்கிள் என்ற கேள்வியை எழுப்புகிறார். அதற்கு விஜய் சிரித்துக்கொண்டே மலுப்புகிறார்.

இதில் பல கேள்விகள் மிக எதார்த்தமான கேள்விகளாகவே உள்ளது. பத்து வருடங்கள் பிறகு விஜய் பேட்டி கொடுப்பதால் கேள்விகள் எப்படி இருக்க வேண்டும் என பலரும் நெல்சனை விமர்சித்து வருகிறார்கள். அதிலும் விஜய்யை சிவகார்த்திகேயன் பேட்டி எடுத்து இருந்தால் நிச்சயமாக சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என கூறிவருகிறார்கள்.

ஏனென்றால் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வந்தவர். மேலும் பல பிரபலங்களை கேள்வி கேட்ட, பதில் கூற முடியாமல் திணற அடித்துயுள்ளார். இதனால் விஜய் பற்றி தெரியாத பல விஷயங்களை சிவகார்த்திகேயன் வெளிக்கொண்டு வந்து இருப்பார். ஏற்கனவே சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் அரபி குத்து பாடல் புரோமோ வெளியாகி சக்கைபோடு போட்டது.