சிவகார்த்திகேயனை விட இந்த ஹீரோ தான் ரொம்ப பிடிக்கும்.. தூக்கி வைத்து பேசிய பிரியங்கா மோகன்

தமிழ் சினிமாவில் டாக்டர் படத்தில் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இவர் அறிமுகமான முதல் படமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனால் தற்போது அனைத்து இயக்குனர்களுக்கும் பிடித்துப்போன நடிகையாக மாறியுள்ளார்.

தற்போது சூர்யா நடிக்கும் பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து வருகிறார் மேலும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

நடிகைகளுக்கு எப்போ ஒருமுறைதான் வாய்ப்புகள் குவியும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றிபெற்ற நடிகைகள் ஒரு சிலர்தான். அந்த வகையில் தற்போது பிரியங்கா மோகனுக்கு தொடர்ந்து பல படவாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இதனை சரியாக பயன்படுத்தி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

பிரியங்கா மோகனிடம் இந்தியாவிலேயே உங்களுக்கு பிடித்த நடிகர் யார் எனக் கேட்டனர். அதற்கு பிரியங்கா மோகன் எனக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மட்டும்தான் மேலும் அவரது நடிப்பும் ஸ்டைலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார். அவருடன் பணியாற்றுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது. அதனால் இனிமேல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பேன் என கூறியுள்ளார். மேலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி படங்களில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்