சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த நடிகை.. உக்ரைன் ஹீரோயினை பிடித்த படக்குழு

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 20 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் பூஜையுடன் பிரமாண்டமாக தொடங்கியது.

அனுதீப் இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் தென்னிந்திய இளைஞருக்கும், வெளிநாட்டு பெண்ணுக்கும் நடக்கும் காதலை மையப்படுத்தும் கதை களத்தை கொண்டது.

இதனால் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பல வெளிநாட்டு ஹீரோயின்களை படக்குழு தேடி வந்தது. அதில் இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்த ஒலிவியா மோரிசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இது குறித்த செய்திகளும் சில நாட்களாக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஒலிவியா மோரிஸ் இந்த படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய கால்ஷீட் மற்றும் சம்பளத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் படக்குழு தற்போது வேறு ஒரு வெளிநாட்டு நடிகையை படத்தில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. அதில் உக்ரைன் ஹீரோயின் மரியா ரியா போஷப்கா இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த எஸ் கே 20 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இந்த வெளிநாட்டு ஹீரோயின் பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.