சிவகார்த்திகேயனின் இயக்குனரை புகழ்ந்து தள்ளும் திரையுலகம்.. அவரைப் பார்த்து கத்துக்கோங்க அட்லி

தமிழ் சினிமாவில் தான் இயக்கிய முதல் படமே வெற்றி பெற்றுவிட்டால் சில இயக்குனர்கள் அடுத்தடுத்த படங்களில் தயாரிப்பாளரிடம் பல நிபந்தனைகள் போடுகிறார்கள். வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர்களும் அதற்கு சம்மதிக்கிறார்கள்.

தற்போதுள்ள இயக்குனர்கள் ஸ்டார் ஹோட்டலில் ரூம் வேண்டும், சூட் ரூம்வேண்டும் என தயாரிப்பாளர்களை எக்கச்சக்க செலவில் இழுத்து விடுகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் செய்வதறியாமல் இயக்குனர் கேட்கும் அனைத்தையும் செய்து கொடுக்கிறார்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக நாம் அட்லியையே எடுத்து கொள்ளலாம். தற்போது ஷாருக்கானை வைத்து லயன் படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அட்லி இப்படத்திற்காக கிட்டத்தட்ட 2 வருடமாக மும்பையில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இதற்கும் தயாரிப்பு நிறுவனம் தான் செலவு செய்கிறது.

இந்நிலையில் ஜாதி ரத்னாலு தெலுங்குப் படத்தை இயக்கிய அனுதீப் கேவி தற்போது சிவகார்த்திகேயனின் 20-வது படமான தெலுங்கு படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் இயக்குனர் அனுதீப் மிகவும் எளிமையானவர். தயாரிப்பாளருக்கு அதிகம் செலவு வைக்காமல் பட கம்பெனியிலேயே படுத்துக் கொள்வாராம். அதுமட்டுமல்லாமல் பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் சாப்பாடு வேண்டும் என அடம்பிடிக்கும் இயக்குனர்களின் நடுவே இவர் சாதாரண ஹோட்டலில் இருந்து வரும் சாப்பாட்டை தான் சாப்பிடுவாராம்.

அதுமட்டுமல்லாமல் படத்திற்கு தேவையானது மட்டுமே பயன்படுத்துவாராம். ஷூட்டிங் நடக்கும் இடத்தில் இயக்குனர் என்ற பந்தா காட்டாமல் யார் எந்த வேலை சொன்னாலும் மறுக்காமல் அனுதீப் செய்வாராம். பல உயரங்கள் சென்றாலும் அனுதீப் இதே எளிமையுடன் இருக்க வேண்டும்.

சர்வதேச அளவில் ட்ரெண்டான கமல்.. பிரதமரையே மிஞ்சும் அளவுக்கு கிடைத்த வரவேற்பு

தற்போது உலகத்திலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கும் நபர் யார் என்று கேட்டால் அது உலக நாயகனாக தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு விக்ரம் திரைப்படம் அவரை சந்தோஷ கடலில் ஆழ்த்தியுள்ளது. இப்படி ஒரு ...
AllEscort