சிவகார்த்திகேயனால் என் வாழ்க்கையே போச்சு.. கண்ணீர் விட்ட விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நல்ல நல்ல படங்களாக கொடுக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் விஷ்ணு விஷால். ஆனால் சமீபகாலமாக பெரிய வெற்றிப்படங்கள் கொடுத்தும் இவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை என்பதே குறையாக இருந்தது.

அப்படி அமைந்த சில படங்களும் கையை கடித்ததால் தற்போது வேறு வழியின்றி சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய FIR என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் உள்ள நிலையில் கண்டிப்பாக இந்த படம் அவரது கேரியரில் மறக்க முடியாத முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணு விஷால் கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா வட்டாரத்தில் தான் சந்தித்த அவமானங்கள் ஏமாற்றங்கள் பற்றி FIR படத்தின் பிரஸ்மீட்டில் சொல்லி கண்ணீர்விட்டு உள்ளது வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக தான் அறிமுகப்படுத்தி வெற்றி இயக்குனராக மாற்றிய சிலர் தனக்கே எமனாக அமைவதுதான் கவலையாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அவர் வேறு யாரையும் சொல்லவில்லை. இன்று நேற்று நாளை என்ற படத்தை எடுத்த ரவிக்குமாரை தான் சொல்கிறார். வழக்கமாக வந்த கமர்ஷியல் சினிமாவில் வித்தியாசமான கதையை கொடுத்து சூப்பர் ஹிட் படமாக மாறியது தான் இன்று நேற்று நாளை. இந்த படம் சூப்பர் ஹிட் அடித்த உடன் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உடனடியாக தொடங்க விஷ்ணுவிஷால் ஆசைப்பட்டார். அதற்கான கதையையும் திரைக்கதையையும் ரவிக்குமார் ஏற்கனவே முடித்து வைத்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இதே மாதிரி வெற்றிப் படங்களைக் கொடுத்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட் நிலையாக இருக்கும் என்பதை நம்பி அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்க ஆசையாக இருந்தாராம் விஷ்ணு விஷால். ஆனால் இடையில் சிவகார்த்திகேயன் புகுந்து தனக்கு ஒரு படம் செய்து கொடுக்கும்படி கேட்டதால் சம்பளமும் அதிகம் அதேசமயம் அவருடன் படம் செய்தால் நம்ம பெரிய இயக்குனர் ஆகிவிடலாம் என்ற நினைப்பில் இன்று நேற்று நாளை 2 படத்தை வேறு ஒருவரின் கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் இப்போதும் சொல்கிறேன். என்னுடன் பணியாற்றுபவர்கள் பெரிய இயக்குனர்கள் ஆக வளர்ந்தால் எனக்கு சந்தோசம்தான். அதே நேரத்தில் உங்களுக்கு பட வாய்ப்பு கொடுத்த என்னுடன் தொடர்ந்து படங்கள் செய்தால் தான் நானும் பெரிய நடிகராக வலம் வர முடியும் என்ற ஆதங்கத்தை முன்வைத்து கண்ணீர் வடித்துள்ளார் விஷ்ணு விஷால்.

குக் வித் கோமாளி சீசன்3 எப்போது தெரியுமா.. சீக்ரெட்டை உடைத்தால் வெங்கடேஷ் பட்!

விஜய் டிவியின் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ரசிகர்களால் பார்க்கப்படும் குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோ இரண்டு சீசன்களில் வெற்றிகரமாக நிறைவு செய்து மூன்றாவது சீசன் தற்போது துவங்கியுள்ளது. குக் வித் கோமாளி ...
AllEscort