இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. தமிழ் சினிமாவில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

அத்திரைப்படத்தில் ராமச்சந்திர ஆச்சாரி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அவினாஷ். கன்னட நடிகரான இவர் கன்னட மொழியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சந்திரமுகி திரைப்படம் இவரை அடையாளப்படுத்தியது. அதைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சிறுத்தை படத்தில் வில்லனாக வரும் பாவுஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவரும் இவரே என்பது நாம் அறியாத ஒன்று.

இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் அவர் காட்டியுள்ள வித்தியாசம் அவரா இவர் என்று நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

அண்ணி, காற்றுக்கென்ன வேலி போன்ற தமிழ் சீரியல்களிலும் டிஷ்யூம், ஜே.ஜே போன்ற திரைப் படங்களில் நடித்தவருமான நடிகை மாளவிகா இவருடைய மனைவி ஆவார்.