தமிழ் சினிமாவில் பக்கா கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக உச்சத்தை தொட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக சிறுத்தை சிவா யாருடன் படம் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

சமீபத்தில் சிறுத்தை சிவா கொடுத்த பேட்டி ஒன்றில் அண்ணாத்தா படத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது சூர்யா ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். ஏற்கனவே சூர்யா உடன் சேர்த்த சிவா இணைந்து பணியாற்ற வேண்டியது அண்ணாத்த படத்தால் தடைபட்டது.

அண்ணாத்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிறுத்தை சிவாவுடன் சூர்யா இணைய வேண்டாம் என்கிற கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க அடுத்தடுத்து அனைத்து முன்னணி நடிகர்களின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக சிறுத்தை சிவா குறிப்பிட்ட லிஸ்ட் தான் அதிர வைத்துள்ளது.

சூர்யா படத்தை முடித்தவுடன் மீண்டும் தல அஜித்துடன் இணைந்து ஒரு படம் செய்ய முடிவு செய்துள்ளாராம் சிறுத்தை சிவா. தல அஜித்தை வைத்து ஏற்கனவே வீரம், விஸ்வாசம், வேதாளம், விவேகம் என்ற 4 படங்களை இயக்கி இருந்தார். ஐந்தாவது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளது. அதேபோல் முதல் முறையாக தளபதி விஜயுடன் இணைந்து ஒரு படம் செய்வதற்கான வேலையும் தொடங்கி விட்டாராம் சிறுத்தை சிவா.

ஆக மொத்தத்தில் அடுத்த இரண்டு வருடங்களில் சூர்யா, அஜீத், விஜய் என தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் படங்களை இயக்குவதை இப்போதே உறுதி செய்துள்ளார் சிறுத்தை சிவா. இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்களோ சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் சமூக வலைதளம் வாயிலாக சிவாவுடன் படம் வேண்டாம் என கதறி வருகின்றனர்.

ஆனால் ஃபேமிலி செண்டிமெண்ட் உடைய என்டர்டெயின்மென்ட் படங்களை இயக்குவதில் கில்லியாக இருக்கும் சிறுத்தை சிவாவுடன் கண்டிப்பாக அனைத்து நடிகர்களும் ஒரு படம் செய்ய உறுதியாக இருக்கிறார்களாம். பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கிறது என்று.