சிம்பு பட இயக்குனருடன் இணைந்த விஷால்.. அஜித்தினால் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்

தமிழ் சினிமாவில் திரிஷா இல்லன்னா நயன்தாரா படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இதனையடுத்து நடிகர் சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படத்தை இயக்கினார். தொடர்ந்து அடல்ட் படங்களை இயக்கி வந்ததால் தமிழ் சினிமாவில் பி-கிரேட் இயக்குனர் என்ற இமேஜை கொண்டுள்ளார்.

தற்போது காதலை தேடி நித்யானந்தா மற்றும் பகீரா ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இது தவிர அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்து பேசிய பின்னர் தனது எண்ண ஓட்டம் மாறிவிட்டதாக கூறியுள்ள ஆதிக் இனி அடல்ட் கதைகளை இயக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா, ஜனனி ஐயர், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனை அடுத்து தனது அடுத்த படத்திற்காக கதை எழுதி வந்த ஆதிக் ரவிச்சந்திரன் பல முன்னணி நடிகர்களை சந்தித்து கதை கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் இறுதியாக, நடிகர் விஷாலை சந்தித்து ஆதிக் ரவிச்சந்திரன் கதை கூறியுள்ளார். அவர் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே உடனே விஷால் ஒகே சொல்லிவிட்டாராம். விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனமே, இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது.

விரைவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தற்போது விஷாலுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷால் நடிப்பில் தற்போது எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. இதுதவிர அவரது நண்பர்கள் ராணா மற்றும் நந்தா ஆகியோர் தயாரிக்கும் புதிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.