சிம்பு டார்ச்சரால் சினிமாவை விட்டு விலகினேன்.. வினய் பட தங்கச்சி பகீர் குற்றச்சாட்டு

இளம் நடிகர் சிம்பு எப்பொழுதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தனக்கென பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டிருந்தாலும், படங்களின் தொடர் தோல்வி, உடல் எடைக்கூடியது, நடிகைகளுடன் காதல் சர்ச்சை, ஷூட்டிங்கிற்கு சொன்ன நேரத்தில் வருவதில்லை என தயாரிப்பாளர்களுடன் உடன் பிரச்சனை என நடிப்பதற்கு ரெட் கார்டு பெரும் வரை பெரிய சிக்கல்களை எதிர்கொண்டார். இருப்பினும் தற்போது உடல் எடையை குறைத்து மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சுறுசுறுப்பாக படங்களின் மீண்டும் நடித்து வருகிறார்.

அவர் சர்ச்சைகளை விட்டு விலகி இருக்க நினைத்தாலும் சர்ச்சைகள் அவரை விடுவதாக இல்லை. சிம்புவால் தான் நடிப்பதை ஒரு நடிகை விட்டு விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிம்புவின் நடிப்பில் 2007ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ட்டவன். ஆனால் இந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. ஆனால் இந்த படத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களையே தான் சினிமாவை விட்டு விலகியதாக இதில் நடித்த லேகா வாஷிங்டன் கூறியுள்ளார்.

சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் நடிகை , வினய் நடிப்பில் வெளியான ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தது மூலம் தமிழ் திரை ரசிகர்ளுக்கு பரிட்சயம் ஆனார். பின்னர் குறிப்பிடத்தக்க படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.

நடித்துக்கொண்டிருந்த பொது திடீரென காணாமல் போன இவரை பேட்டி கண்டு வினாவியபொழுது, நடிப்பில் தனக்கு ஆர்வம் இருந்தாலும், தான் நடிப்பதை கைவிட்டு விட்டதாக கூறும் இவர் அதற்கு முக்கிய காரணமாக சிம்புவுடன் நடித்த கெட்டவன் படத்தை குறிப்பிட்டுள்ளார். ஆனால் என்ன சம்பவம் என்பதை அவர் கூற மறுத்து விட்டார்.

கடைசியாக பிரசன்னாவின் கல்யாண சமையல் சாதம் படத்தில் நடித்த இவர், தற்போது மும்பையில் சிற்பகலை கலைஞராக உள்ளார். 2017ஆம் ஆண்டு பாப்லோ சட்டர்ஜீ என்பவரை திருமண செய்துகொண்டு மீடியாக்களில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார். இவ்வாறான சூழ்நிலைகளால் வெளிமாநிலத்து நடிகைகள் ஆக்கிரமிக்கும் தமிழ் சினிமாவை தமிழ் பெண் ஒருவர் விட்டு விலகியுள்ளது கேட்பதற்கு சங்கடமாக தான் உள்ளது.

சினமாவில் பெரும்பாலான நடிகைகள் சந்திக்கும் பிரச்சனைகளால் சில நல்ல திறமையுள்ளவர்களை இந்த திரையுலகம் இழந்து தான் வருகிறது.இந்த சர்ச்சைகளை கடந்து, சிம்பு தற்போது பத்து தல, கொரோனா குமார், வெந்து தணிந்தது காடு என்கிற படங்களில் நடித்து வருகிறார்.