சிம்புவால் எரிசலடைந்த கௌதம் கார்த்திக்.. என்ன கூப்பிட்டு வச்சு அசிங்கபடுத்துறிங்களா.?

நடிகர் சிம்புவிடம் அவரது ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். இனிமேலாவது நல்ல படங்களை தாமதிக்காமல் கொடுத்து நம்மை எப்போதும் உற்சாகத்தில் வைத்திருப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில்தான் அவர் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் இப்போது பழைய சிம்பு மாதிரி சொல்லி அடிக்கும் நிலையில் நடிகர் சிம்பு தற்போது இல்லை. நிதானமாக எழுந்து நின்று யோசித்து ஒவ்வொரு முடிவையும் எடுத்து காய் நகர்த்தி வருகிறார். அவர் தேர்வு செய்யும் ஒவ்வொரு படங்களிலும் முன் செய்த தவறை தற்போது செய்ய கூடாது என்று நல்ல பிள்ளையாக நடித்து வருகிறார்.

அப்படியிருக்கையில் இவரின் அடுத்தடுத்த படங்களின் வரிசையில் முக்கியமாக அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடிய ஒரு படம் என்றால் அது இயக்குனர் நரதன் மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படம் தான். இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். அப்படி இருக்கையில் நடிகர் கௌதம் கார்த்திக் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருந்தது.

கௌதம் கார்த்திக் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒரு படம் கூட அமையவில்லை என்பதால் தற்போது மற்ற நடிகர்களோடு இணைந்து நடிக்க ஆரம்பித்து விட்டார். மேலும், இவர் நடித்த எந்த ஒரு படமும் கௌதம் கார்த்திக்கிற்கு நடிப்புக்கென ஒரு நல்ல பெயரை வாங்கித் தரவில்லை. அவரின் அப்பாவின் பெயரை கொஞ்சம் கூட சம்பாதிக்க முடியாமல் கௌதம் கார்த்திக் திணறி வருகிறார்.

அதனால் பத்து தல படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதற்காக கௌதம் கார்த்திக்கிடம் கேட்கப்பட்டு அவரும் சம்மதித்து இருக்கிறார். ஆனால் படத்தின் படப்பிடிப்பிற்கு வந்த பிறகு உங்களுக்கு கெஸ்ட் ரோல் இல்லை நீங்கள் தான் முக்கியமான கதாபாத்திரம் என்று சொன்னவுடன் இதை முன்கூட்டியே என்னிடம் சொல்லவில்லையே என்று அதிர்ந்து போய் இருக்கிறார் கௌதம் கார்த்திக்.

இதனால் படப்பிடிப்பு மிகவும் தாமதம் ஆவதால், கௌதம் கார்த்திக் கொடுத்த கால்ஷீட்டுக்கு அதிகமாக படப்பிடிப்புக்கு வர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதனால் அவர் கைவசம் வைத்திருந்த அத்தனை படங்களும் அவரை விட்டு கை நழுவிப் போய்விடும் நிலையில் உள்ளது.

இப்போது எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற கதையாகிவிட்டது. இப்படி படத்தில் கெஸ்ட் ரோல் என்று கால்ஷீட் வாங்கி விட்டு படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்று சொன்னால் நான் என்ன செய்வது என்று கௌதம் கார்த்திக் புலம்பி வருகிறாராம்.