சின்னவீட்டுக்கு வீடு கட்டி கொடுத்த கவுண்ட மணி.. அம்பலமான நக்கல் மன்னனின் லீலைகள்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர், இன்றும் வலம் வரக் கூடியவர் நடிகர் கவுண்டமணி. தற்போது காமெடி மீம்களாக நமது கண்களில் அதிகமாக தென்படக்கூடிய ஒருவர்தான் நடிகர் கவுண்டமணி. டைமிங் காமெடிக்கு மிகப்பெரிய பெயர் பெற்றவர். 1964 ஆம் ஆண்டு வெளியான சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு டிரைவர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர்.

பின்பு பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் தொடங்கி, பல படங்களில் சப்போர்ட்டிங் நடிகராக நடித்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் அதே போல சப்போர்ட்டிங் நடிகராக நடித்துக்கொண்டிருந்த நடிகர் செந்திலோடு கூட்டணி சேர்ந்து நடிக்க ஆரம்பித்த பிறகுதான் கவுண்டமணி-செந்தில் என்ற ஒரு சூப்பர் காமெடி காம்பினேஷன் உருவானது. திரையில் எந்த நடிகராக இருந்தாலும் சகட்டுமேனிக்கு வாயா போயா வாடா போடா என கிண்டலும் நக்கலும் கலந்த வசனங்களை பேசக்கூடியவர் தான் கவுண்டமணி. இதனால் பல நேரங்களில் பல முன்னணி நடிகர்கள் இவரை தவிர்த்தும் வந்திருக்கின்றனர்.

கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் படம் தான் இவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை படத்தில் இவரை ஒரு தனி கதாபாத்திரமாக பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அந்த படத்தில் வந்த வாழைப்பழ காமெடிக்கு பிறகு இவரை ஒரு முக்கிய காமெடி நடிகராக தங்கள் மனதில் ஏற்றுக்கொண்டனர். அதன் பின் வாழ்க்கையில் ஏற்றம் மட்டுமே கண்ட கவுண்டமணி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வெற்றியும் கண்டார்.

இன்றும் சமூக வலைதளத்தில் கலாய்க்க பயன்படுத்தும் மீம்களுக்கு இவர் நடித்த சூரியன் படத்தின் சத்தியசோதனை, I am very happy போன்ற டெம்ப்ளேட்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது டைமிங் காமெடியை மட்டுமே நம்பி சந்தானம்,சதீஷ் போன்ற பல நடிகர்கள் திரைத்துறைக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் கவுண்டமணி தான். அவர் போட்டுவைத்த பாதைதான் தற்போது பல காமெடி நடிகர்கள் அந்த பாணியில் உருவாகியிருக்கின்றன.

அப்படி நக்கல் நையாண்டிக்கு பெயர்போன இந்த நக்கல் மன்னன், ஒரு காலத்தில் உச்ச நடிகராக இருந்தபோது, சர்மிளி எனும் ஒரு நடிகையோடு தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகைக்காக நிறைய செலவு செய்து இருப்பதாகவும் ஏன் ஒரு வீடு கட்டி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதைப் பற்றி வெளியில் அதிகமாக தெரியாது என்றும் கூறப்படுகிறது.

இதனை திரைத்துறையில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ளும் பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார். திரையில் பல நடிகர்களை வசனங்களால் விளாசித் தள்ளும் கவுண்டமணி, பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக வலம் வந்த இவர் ஒரு சின்ன வீடும் வைத்து அதை மெயிண்டெய்ன் செய்து இருக்கிறார் என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல இருக்கிறது.