சினிமா ஆசை, 49 வயதிலும் திருமணத்தை வெறுத்து விஜய்சேதுபதி பட நடிகர்.. அடுத்தடுத்து 11 படங்களில் வாய்ப்பு

தமிழ் சினிமாவில் காமெடிநடிகர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு பல குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடிப்பது வழக்கம் தான் அப்படி காமெடி மூலம் அறிமுகமான நடிகர் டி எஸ் ஆர். அதன்பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சேதுபதி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களிடம் பரிட்சயமானர். அதன்பிறகு கனா, கும்கி மற்றும் காடன் போன்ற பல படங்கள் நடித்துள்ளார். சினிமா வருவதற்கு முன் இவர் தொழில் துறையில் பல நஷ்டங்களை சந்தித்துள்ளார்.

பின்பு திரைப்படம் நடிப்பதற்கு ஆர்வம் கொண்டு அதன் பிறகு சினிமாவில் நுழைந்த இவருக்கு பெரிய அளவில் கதாபாத்திரங்கள் கிடைக்காமல் படங்களில் சிறிய சிறிய காட்சியில் நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தன. மேலும் சில கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார். சினிமா ஆசை மற்றும் வாழ்க்கையில் பட்ட தொழில்ரீதியான அடியினால் 49 வயது ஆகியும் தற்போது வரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.

தற்போது பஹீரா படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா படத்திலும், விருமன் என கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் நடித்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் தமிழ் மொழியைத் தாண்டி ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

சமீபத்திய பேட்டியில் சினிமாவில் நடிப்பதற்கு பலரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கின்றன. அப்படி எனக்கு கிடைத்த வாய்ப்புகள் சிறியதாக இருந்தாலும் அதனை ஏற்று நடித்து வருகிறேன். மேலும் பல படங்களில் நடித்து வருவதாக கூறியுள்ளார்.

ரஜினி திரைக்கதை எழுதிய 2 படங்கள்.. விழுந்த பெரிய அடியால் அந்த பக்கமே போகாத சூப்பர் ஸ்டார்

ரஜினி நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் நடித்திருந்தாலும் அவர் மனதுக்கு நெருக்கமான படம் என்று ஸ்ரீ ராகவேந்திரா திரைப்படத்தை எல்லா மேடைகளிலும் கூறுவார். அதேபோல் சூப்பர் ஸ்டார் திரைக்கதை எழுதிய படங்களும் உண்டு. அவர் தன்னுடைய ...