சினிமாவை விடமால் கெட்டியாக பிடித்த 5 நடிகர்கள்.. வயசானாலும் உங்க ஸ்டைலும, அழகும் இன்னும் மாறல!

சினிமாவில் நடிகர்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதான காரியமில்லை. நிறைய நடிகர்கள் அப்படி பல்வேறு திறமைகள் கொண்டு இருந்தாலும், சினிமாவில் கால் பதித்து, ஆளுமை செலுத்துவது மிகவும் கடினம். அப்படி பார்க்கும் போது ஒரு சில நடிகர்கள் மட்டுமே அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை திரைத்துறையில் கால் பதித்து நடித்துக் கொண்டிருப்பவர்கள் பற்றி தான் இந்த பதிவில் காணலாம்.

சங்கிலி முருகன்: சங்கிலி முருகன் ஒரு நடிகராகவும், ஒரு தயாரிப்பாளாராகவும் தமிழ் சினிமாவில், அறியப்படுவர் இவர். ஒரு கை ஓசை என்ற திரைப்படத்தில் இவர் ஏற்ற சங்கிலி கதாபாத்திரத்தின் பெயருடன் சேர்த்து சங்கிலி முருகன் என்று இன்று வரை அழைக்கப்படுகிறார். முருகன் சினி ஆர்ட்சு என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக ஒன்பதற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.இன்றும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான வித்தியாசமான காதாப்பாத்திரங்களில் இவரை காண முடிகிறது.

டெல்லி கணேஷ்: அத்தனைக் கதாப்பாத்திரங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு நடிகர் என்றால் அது டெல்லி கணேஷ் தான். காமெடி என்றாலும் சரி அழ வைக்கும் செண்டிமெண்ட் கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி, பிச்சு உதற கூடிய நடிகர் டெல்லி கணேஷ். அவரது பாத்திரம் கமல் ஹாசனின் நாயகன் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக அறியப்பட்டது. அவர் 1976 இல் இருந்து தற்போது வரை 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இன்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார்.

மௌலி: நடிகர் மௌலி திரைக்கதை ஆசிரியராகவும், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில், சில திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார். கமல்ஹாசன், சிம்ரன் ஆகியோர் நடித்த பம்மல் கே. சம்பந்தம் திரைப்படமும், மாதவன் நடித்த நளதமயந்தி திரைப்படமும் இவர் இயக்கிய வெற்றித் திரைப்படங்களில் சிலவாகும்.அதுமட்டுமின்றி, படங்களில் குணசித்திர வேடமும், தற்போது தமிழ் சீரியல்களில் முக்கிய வேடங்களிலும் நடித்தும் வருகிறார். காமெடி திரைக்கதைகளை அமைத்து அதற்கேற்ற நடிகர்களை தேர்வு செய்து, வெற்றிப்படங்களாக தருவது இவர்க்கு கை வந்த கலை.

விஜயக்குமார்: நாட்டாமை என்று சொன்னால் இன்றும் நமக்கு முதலில் நினைவில் வருவது நிச்சயமாக நடிகர் விஜயக்குமாராக தான் இருக்க முடியும். 1961 ஆம் ஆண்டில் ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் குழந்தை நடிகராக இவரது பயணம் தொடங்கியது. ஏகப்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும், மிரட்டும் வில்லனாகவும் நடிக்க கூடியவர்.நடிக்கும் அத்தனை கதாப்பாத்திரங்களை தனக்குள் முழுதாய் வாங்கி கொண்டு நடிக்க கூடிய சிறந்த நடிகர். இவர் இன்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவரின் கம்பீர குரலும், கச்சிதமான உடல் மொழியும் இவருக்கு மிகப்பெரிய பக்க பலமாக உள்ளது.

ராஜ்கிரண்: தலைவாழை இலையில் சிக்கன், மட்டன், முட்டை என வைத்து ஒரு கட்டு கட்டுவது, சண்டைக்காட்சியில் எதிரிகளின் எழும்பை முறித்து போடுவது என்றுதான் இன்றைய 2k கிட்ஸ்களுக்கு இவரை தெரியும். அப்படிப்பட்ட ஒரு நடிகர் அதன் பின்பு பல படங்களில் முரட்டு குணமில்லாத குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் தனுஷின் இயக்கத்தில் பவர் பாண்டி படத்தில் முக்கிய முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.இவரின் கட்டான உடல் கட்டும், இவரின் நடிப்பு திறமையினாலும் இன்று வரை தந்தை, தாத்தா போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்து கொண்டு இருக்கிறார்.