சினிமாவில் வருவதற்கு முன் சமந்தா செய்த வேலை.. இதான் விடாமுயற்சி விஸ்வரூப வளர்ச்சியா

யசோதா என்ற பெயரை சினிமாவுக்காக சமந்தா என மாற்றி கொடி கட்டி பறக்கிறார். தற்போது தமிழில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பல நடிகைகள் செய்தி வாசிப்பாளர், மருத்துவர் என பல வேலை செய்துள்ளனர். ஏன் நடிகை சாய் பல்லவி கூட டாக்டர்தான்.

ஆனால் சமந்தா இவர்கள் போல் இல்லாமல் வித்தியாசமான வேலைகள் கூட செய்து இருக்கிறாராம். இவர் கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹால் விளம்பர நடிகையாக பணியாற்றியுள்ளார். மேலும் திருமண நிகழ்ச்சியில் வரவேற்பு பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

இதன் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து தற்போது பிரபல நடிகையாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் இன்னும் பல விளம்பரங்களில் நடித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சமந்தா தற்போது பல கோடிக்கு அதிபதியாக உள்ளார்.

அவருடைய இந்த வளர்ச்சி எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். இவ்வளவு கஷ்டப்பட்டு தன் திறமையால் உயர்ந்த சமந்தாவை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

எதற்கும் துணிந்தவன் இதுக்கு பயந்துதான் ஆக வேண்டும்.. சூர்யா பட ரிலீஸ்க்கு வேலி போட்ட படம்

கொரோனா நோய் தொற்றால் போடப்பட்டிருந்த ஊரடங்கு சமயத்தில் திரை உலகம் பயங்கர நெருக்கடியை சந்தித்து விட்டது. படப்பிடிப்பு நடத்த முடியாமல், எடுத்த படத்தை வெளியிட முடியாமல் பல பிரச்சனைகளை திரையுலகம் சந்தித்துள்ளது. தற்போது கொரோனா ...