அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை அஜித் ரசிகர்கள் திரையரங்கில் காண்பதற்காக பல நாட்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இப்படத்தினை பற்றி படக்குழுவினரிடம் அவ்வப்போது அப்டேட் கேட்டு வருகின்றனர்.

சமீபத்தில் வலிமை படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தினை வருகிற பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர். அதனால் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இயக்குனர் வினோத் அஜித்தை பற்றி சமீபத்திய பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது இப்படத்தில் நிறைய பைக் ஸ்டண்ட் காட்சிகள் உள்ளன. அதில் அஜித்குமார் சிறப்பாக நடித்துள்ளார் என ஒரு சின்ன அப்டேட்டை கொடுத்தார். மேலும் ஒரு பைக் சேசிங் காட்சியில் எடுக்கும்போது சார் இந்த காட்சியில் நீங்கள்தான் நடிக்கிறீர்கள் என்பது ரசிகர்களுக்கு தெரியவேண்டும் அதனால் ஹெல்மெட்டை கழட்டி பைக் ஓட்டுங்கள் என கூறினேன்.

ஆனால் அதற்கு அஜித் பைக் ஹெல்மெட் போட்டு தான் ஓட்டணும் சினிமாவிற்காக ரூல்ஸ் மாத்த கூடாது என கூறி மறுத்து விட்டார் எனக் கூறினார். ஒரு சீன்ல ஹாரன் அடிச்சுகிட்டு கார் ஓட்ற மாதிரி எடுக்கணும் என சொன்னபோது கூட அதையும் மறுத்துவிட்டார். ஹாரன் அடிச்சிக்கிட்டு கார் ஓட்டுவது மிகப்பெரிய நியூசென்ஸ். ஹாரன் அடிச்சுக்கிட்டு கார் ஓட்டினால் குழந்தைகள், பெரியவர்கள் வரை அனைவரும் பயப்படுவார்கள். இந்த மாதிரி சினிமாவிற்காக இதையெல்லாம் மாற்றிக் கொள்ளக் கூடாது என கூறியுள்ளார்.

இந்த தகவலை வினோத் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டார். இதனைக் கேள்விப்பட்ட தல ரசிகர்கள் அஜித்தை நினைத்து பெருமைப்படுவதாக கூறிவந்தனர். மேலும் தளபதி ரசிகர்களும் மற்றவர்கள் போல் இல்லாமல்அஜித் உண்மையாக இருப்பதை நினைத்து பெருமைப் படுவதாகும் கூறிவருகின்றனர். தற்போது தல தளபதி ரசிகர்கள் இருவருமே அஜித்தின் இந்த செயலை பார்த்து பாராட்டி வருகின்றனர்.