சிங்கம் வேஷத்தில் மேளதாளத்துடன் தொடங்கிய சிம்பு படம்.. அதிரடியா வந்த லேட்டஸ்ட் அறிவிப்பு

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் தற்போது தமிழ் சினிமாவில் சிம்பு பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார்.

அந்த வரிசையில் பிரபல இயக்குனர் கெளதம் மேனன் உடன் சிம்பு மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பட இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிம்புவின் புதிய படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் 48வது படமாக உருவாக உள்ள இப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷ் அவர்கள் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். மேலும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை வெளியாக உள்ளது.

என்னதான் சிம்பு கோலிவுட்டில் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் அவருக்கென தனி ரசிகர் கூட்டம் ஒன்று உள்ளது. அவர்கள் சிம்புவை எப்போதும் விட்டுக்கொடுப்பதே இல்லை. இந்நிலையில் சிம்புவின் 48வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஒரு வேளை கொரோனா குமார் படத்தின் அப்டேட் ஆக இருக்கலாம் என்று கூட ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தற்போது சிம்பு நடித்து முடித்துள்ள மாநாடு மற்றும் மஹா ஆகிய இரண்டு படங்களும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. இதில் மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் மஹா படம் எப்போது வெளியாகும் என தற்போது வரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.