சிங்கம் போன்ற தோரணை, தங்கமான குணம்.. தனுஷை புகழ்ந்து தள்ளிய பீஸ்ட் பட பிரபலம்

தனுஷை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது அவரது தந்தை, அதன் மூலம் படிப்படியாக முன்னேறி தற்போது அசுர வளர்ச்சியில் உள்ளார் தனுஷ். ஆனால் திருமண வாழ்க்கையில் தற்போது கசப்பான சம்பவங்கள் நடந்துதான் வருகிறது. பிரபல இயக்குனர் மற்றும் பீஸ்ட் பட வில்லன் ஆன செல்வராகவன் தனது தம்பியை புகழ்ந்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அண்ணனும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் நானே வருவேன் திரைப்படத்தில் கைகோர்த்து நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆன நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு வேளைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் தனுஷுடன் செலவழித்த நேரங்கள் குறித்து இயக்குநர் செல்வராகவன் டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

2002ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக ந தனுஷ் நடிகராகவும், செல்வராகவன் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினர், தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் இருவரும் கை கொடுத்தனர். இந்த இரண்டு திரைப்படங்களிலும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த நிலையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் 2011ஆம் ஆண்டு வெளிவந்த மயக்கம் என்ன திரைப்படத்தை இயக்கிய செல்வராகவன் இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகினார்.

தற்போது நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் செல்வராகவன் பேசியுள்ள டயலாக்குகள் பெருமளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது இவருடைய நடிப்பை பார்க்க தற்போது ரசிகர்கள் ஆவலோடு இருக்கும் வேளையில், நானே வருவேன் திரைப்படத்தின் தன் தம்பியும் நடிகருமான தனுஷுடன் தான் பணியாற்றிய அனுபவங்களை பற்றி ட்விட் செய்துள்ளார்.

தனுஷ் இரு வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை இந்துஜா, எல்லி அவுர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படப்பிடிப்பின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவரும் நிலையில், தன் தம்பியுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக பணியாற்றும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், நாங்கள் இருவரும் சில காலங்களாக தனித்தனியாக பயணித்த நிலையில், நானே வருவேன் திரைப்படம் எங்களை ஒன்று சேர்த்து பல நேரங்களை ஒன்றாக செலவிட வாய்ப்பாக அமைந்தது என்றும் இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் சிங்கம் போன்ற தோரணையும், தங்கமான குணமும் கொண்டவர் தனுஷ் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் தனுஷின் புன்னகைக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தில் மீசை,தாடி இல்லாமல் தனது கழுத்தில் மாலை அணிந்து தனுஷ் புன்னகைத்து இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

தற்போது நானே வருவேன் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், ஏற்கனவே நடிகர் தனுஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டிருந்தார். அது மட்டுமின்றி படப்பிடிப்பு தளத்திலும் படக்குழுவினருடன் புகைப்படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.