சிங்கம், புலியுடன் சண்டை போட்ட 4 தமிழ் நடிகர்கள்.. அதுலயும் நம்ம சூப்பர் ஸ்டார் வேற மாதிரி!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பல்வேறு விதமான வித்தைகளை கற்றுக் கொண்டுள்ளனர். அதில் ஒரு வித்தைதான் விலங்குகளுடன் சண்டை போடுவது. ஆரம்ப காலத்தில் நடிகர்கள் வில்லன்களுடன் சண்டை போட்டு வந்தனர். ஆனால் படத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும், ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பல இயக்குனர்கள் நடிகர்கள் விலங்குடன் சண்டை போடுவது போல் காட்சிகள் அமைத்தனர்.

அப்படி தமிழ் நடிகர்கள் எந்தெந்த விலங்குகளுடன் சண்டை போட்டுள்ளார்கள் என்பதை பற்றி பார்ப்போம். தமிழ் சினிமாவில் விஜயகாந்த் பல்வேறு விதமான சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்த முதல் வித்தியாசமான சண்டை காட்சி என்றால் அது வேங்கையின் மைந்தன் படத்தில் இடம் பெற்ற சிங்கத்துடன் சண்டை காட்சி தான்.

அதன் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவா திரைப்படத்தில் ஏகப்பட்ட சண்டை காட்சிகள் இடம் பெற்றாலும் பெரிதும் பேசப்பட்டது சிறுத்தையுடன் ரஜினிகாந்த் போட்ட சண்டை காட்சி தான். பின்பு சிறுத்தையுடன் சண்டை போட்டு விட்டதால் ரஜினிகாந்த் அன்னை ஒரு ஆலயம் திரைப்படத்தில் சிங்கத்துடன் சண்டை போட்டார்.

பிரபு கதாநாயகனாக நடித்த காலத்தில் பொண்ணு பார்க்க போறேன் எனும் திரைப்படத்தில் சிறுத்தையுடன் சண்டைபோடும் காட்சியில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கத்திசண்டை பெயர் பெற்றவர் எம்ஜிஆர் ஆனால் இவர் பறக்கும் பறவை திரைப்படத்தில் புலியுடன் சண்டை போட்டுள்ளார். அதன்பிறகு தாயைக் காத்த தனயன் திரைப்படத்திலும் ஒரு புலியுடன் சண்டை காட்சி நடித்துள்ளார்.

இப்படி தமிழ் நடிகர்கள் பலரும் புலி சிங்கம் போன்ற பல்வேறு விலங்குகளுடன் சண்டைக்காட்சியில் நடித்துள்ளனர்.