ரேணிகுண்டா படத்தின் மூலம் சின்ன பெண்ணாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சனுஷா. இவர் ஏற்கனவே மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ரேணிகுண்டா படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்தாலும் கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பெரிதும் எதிர் பார்த்த சனுஷாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அலெக்ஸ் பாண்டியன் திரைப்படம் கார்த்தியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

அதன் பிறகு மலையாள சினிமா பக்கம் மொத்தமாக ஒதுங்கிவிட சொன்னது இப்பவும் தமிழில் நல்ல கதை கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறார். ஆனால் பெரும்பாலும் முன்னணி நடிகர்களுக்கு தங்கச்சி போன்ற வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் சினிமா பிரபலங்களை தன் பக்கம் திருப்ப முயற்சி செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக சமீபத்தில் புகைபிடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மொத்த ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் சனுஷா.

இது வெறும் போட்டோ ஷூட் தான் என்றாலும் பார்ப்பதற்கு அனுபவித்து சிகரெட் அடிப்பது போலவே காட்சி அளித்துள்ளார் சனுஷா. தற்போது இந்த புகைப்படங்கள்தான் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து மாடன் கதாபாத்திரங்களாக அவருக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.