சார் கலகலன்னு ஒரு படம் குடுங்க.. கமர்ஷியல் ஹிட் இயக்குனரிடம் தஞ்சமடைந்த சிவகார்த்திகேயன்

மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது வெங்கட்பிரபு படு பிசியாக வலம் வருகிறார். இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்களும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுவாக வெங்கட்பிரபுவின் படம் என்றாலே அதில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.

அதுமட்டுமல்லாமல் ஒரு நடிகர் பட்டாளமே அவருடன் கூட்டணி அமைத்து படத்தை கலகலப்பாக மாற்றிவிடும். இதன் காரணமாகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மத லீலை திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இளைஞர்களை கவரும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று பலரும் யோசித்து வந்த நிலையில் அது பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வெங்கட் பிரபுவை போல சிவகார்த்திகேயனும் தன்னுடைய நகைச்சுவை வசனங்கள் மூலம் படத்தை கலகலப்பாக மாற்றிவிடுவார்.

அதுமட்டுமல்லாமல் இவருக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் இவரின் நடிப்பில் உருவாகியுள்ள அயலான், டான் போன்ற திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அவர் வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படத்தில் இணைய இருக்கும் இந்த செய்தி அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இப்போது அது நடைபெற உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.