சாய்பல்லவி குடும்பத்தில் நடந்த தற்கொலை.. பேட்டியில் வெளிவந்த தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஆனால் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு என மற்ற மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இருப்பினும் தமிழ் மொழியில் தனுசுடன் மாரி, சூர்யாவுடன் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்தார்.இப்படங்கள் வெற்றி பெற்றதை விட தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

அதனால் சாய்பல்லவி தற்போது தொடர்ந்து தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக தெலுங்கில் வெளியான திரைப்படம் லவ் ஸ்டோரி மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

சமீபத்தில் சாய்பல்லவிடம் பேட்டியில் பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது சாய்பல்லவி மருத்துவர் என்பதால் மருத்துவர் சம்பந்தப்பட்ட படிப்பு சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது நீட் தேர்வால் மாணவர்கள் பலரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு சாய் பல்லவி நீட் தேர்வு இந்த கேள்வி தான் கேட்பார்கள் என்று சொல்லமுடியாது அனைத்து விதமான கேள்விகள் கேட்பார்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.

மேலும் தேர்வில் தோல்வியால் தற்கொலை முடிவை எடுத்துக் கொள்வது தவறான விஷயம் அதுவும் சிறிய வயதில் இந்த மாதிரியான முடிவுகள் ஏற்பது வேதனையை தருகிறது என கூறியுள்ளார். மேலும் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என சொல்வது சுலபம் ஆனால் அவர்களது மனதில் ஏற்பட்ட வேதனை போவது கடினம் எனக் கூறியுள்ளார்.

மேலும் என் குடும்பத்திலும் நீட் தேர்வால் ஒருவர் இறந்துள்ளார் அதுவே எங்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது. தேர்வில் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் தோல்வி அடைந்தால் மீண்டும் முயற்சி செய்வதே அதற்கான வெற்றி எனவும் கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் பொறுமையுடன் இருந்து வாழ்க்கையில் முடிவு எடுக்கப்பட வேண்டுமெனவும் தோல்வி ஒரு பெரிய விஷயம் இல்லை எனவும் கூறியுள்ளார்.