நடிகர் தனுஷின் 41 வது படமாக உருவானது கர்ணன் திரைப்படம். தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அவருடைய திரை வாழ்வில் கர்ணன் திரைப்படம் ஒரு முக்கிய திரைப்படமாகும்.

தனுஷ் நடித்த புதுப்பேட்டை , ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட பல படங்கள் தனுஷிற்கு மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த வரிசையில் கர்ணன் திரைப்படமும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் கர்ணன் ஆகும். முதல்படமான பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

திருநெல்வேலி மாவட்டம் பொடியின் குளத்தில் 1990களில் நடந்த சமூக ரீதியான பிரச்சனையை முன்வைத்து கர்ணன் திரைப்படம் எடுக்கப்பட்டது. திரையரங்குகளில் நல்ல வசூலைப் பெற்ற இத்திரைப்படம் OTTயிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் வசூல் ரீதியாக அவருக்கு முக்கிய இடத்தை தந்தது. OTTயில் வெளியான கர்ணன் திரைப்படம் பல மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியானது. இதனால் மாபெரும் முக்கிய படமாக இப்படம் உருவானது.

இதைத்தொடர்ந்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட் இல் நடைபெறும் நியூ ஜெனரேஷன் இண்டிபெண்டன்ட் இந்தியன் பிலிம்ஸ் திரைப்படவிழாவில் கர்ணன் திரைப்படம் திரையிட உள்ளதால், திரைப்பட குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். உலக அளவில் தமிழ் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகவும் முக்கியத்துவமாகவும் இது கருதப்படுகிறது.