சர்வைவர் நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன்.. வெளியேற்றபடுபவர் இவர்தான்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ என்ற நிகழ்ச்சி தற்போது மக்களிடையை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்களை தேர்வு செய்து காட்டிற்குள் அனுப்பியுள்ளனர்.

குடிக்க தண்ணீர், சாப்பிட்ட உணவு போன்றவற்றை எல்லாம் அவர்கள் எவ்வாறு பெறுகிறார்கள் என்பதையும், காட்டில் அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதையும் மையமாக வைத்து தொடங்கப்பட்ட நிகழ்ச்சிதான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியில் காடர்கள் தீவு மற்றும் வேடர்கள் தீவு என்று இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரமே ஆன நிலையில் எலிமினேஷன் ரவுண்ட் நடைபெற்றுள்ளது. இதற்கான ப்ரோமோக்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ரவுண்டில் யாரெல்லாம் எலிமினேட் ஆவார்கள் என்பது குறித்து ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. விஜயலட்சுமி, லட்சுமி பிரியா, இந்திரஜா, ஸ்ருஷ்டி டாங்கே எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

இந்த எலிமினேஷன் ரவுண்ட் பார்ப்பதற்கு பிக்பாஸில் நடைபெற்றது போலவே இருக்கிறது. இதனிடையே, விஜே பார்வதி தன்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்பது தனக்கு தெளிவாக தெரிவதாகவும் தொடர்ந்து புலம்பிக் கொண்டிருகிறார். இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்கள் அவர்கள் யாரை எலிமினேட் செய்ய விரும்புகிறார்களோ அவருடைய பெயரை ஒரு சீட்டில் எழுதி கொடுக்க வேண்டும்.

இதனிடையே அடுத்த ப்ரோமோவில் நடிகர் அர்ஜுன் யாருக்கு ஓட்டு அதிகமாக வருகிறதோ, அவரை முதலில் எலிமினேசன் செய்யப்படுவார் என்று கூறியுள்ளார். இது மக்களிடையே மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

மேலும்  ரசிகர்கள் தரப்பிலிருந்து ‘முதல் வாரமே எலிமினேட் செய்யாமல் எச்சரிக்கை கொடுப்பார்கள். நிச்சயமாக இந்த வாரம் எலிமினேஷன் செய்வதற்கு வாய்ப்பு குறைவுதான்’ என்று கூறப்படுகின்றது. ஆனால் தற்போது இந்திரஜா, ஸ்ருஷ்டி டாங்கே இருவரும் போட்டியில் இருந்து விலகுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Ponniyin Selvan: Part 1

Ponniyin Selvan: Part 1 Cast: Vikram, Aishwarya Rai, jayam ravi, Sobhita Dhulipala, Karthi, Trisha Krishnan, Prakash Raj, Vikram Prabhu, Sarath ...