சர்வைவர் நிகழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பு.. ஆதாரத்துடன் வெளிப்படுத்திய ஸ்ருஷ்டி டாங்கே!

ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் புதுவிதமான ரியாலிட்டி ஷோ தான் சர்வைவர். இதில் 16 போட்டியாளர்கள் தற்போது பங்கேற்று, சிறப்பாக விளையாடி வருகின்றனர். வைல்டு கார்டு சுற்றின் மூலம் மேலும் இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்க படுவார்கள் என்று சர்வைவர் குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் எபிசோடிலேயே இரண்டு அணியினராக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர். காடர்கள் அணி மற்றும் வேடர்கள் அணி என்று இரண்டணி ஆகினர். இவர்களுக்கு பல்வேறு டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்குகளில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

பரிசு என்றால் பணம் அல்ல அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பரிசாக வழங்கி வருகின்றனர் அதாவது காட்டில் நடக்கும் இந்த ரியாலிட்டி ஷோவில் அடிப்படை வசதிகள் ஏதும் இருக்காது. அதனால் அவர்களுக்கு தேவையான பொருட்களாக மசாலா பொருட்கள், நெருப்பு, உணவு சார்ந்த பொருட்கள் போன்ற பொருட்களை பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் முதல் ஆளாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே எலிமினேட் செய்யப்பட்டார். முதல் வாய்ப்பை தவற விட்ட ஸ்ருஷ்டி டாங்கே மீண்டும் காயத்ரி ரெட்டியுடன் போட்டியிட்ட அந்த இரண்டாவது வாய்ப்பிலும் தோல்வியை சந்தித்தார். அதனால் இவர் தனது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு அந்தமானில் இருந்து தனது வீட்டிற்கே சென்றார். வீட்டிற்கு சென்ற ஸ்ருஷ்டி டாங்கேவை கேக் வெட்டி வரவழைத்த குடும்பத்தினர்.

வீட்டிற்கு சென்ற பிறகு தனது முகத்தை கண்ணாடியில் பார்த்த ஸ்ருஷ்டி டாங்கே, சர்வைவர் நிகழ்ச்சிக்கு சென்றதால் தான் தற்போது முகத்தின் நிறமே மாறி டேன்(tan) அதிகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.

தனது பழைய புகைப் படத்துடன் ஒப்பிட்டு பார்த்தபடி தற்போது நிறமே மாறி டேன்களுடன் இருக்கும் முகத்தை புகைப்படம் எடுத்து அவற்றை உறுதி செய்துள்ளார் ஸ்ருஷ்டி டாங்கே. தற்போது இந்த புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி விட்டது.

பீஸ்ட் தேதியை வெளியிட்டு உறுதி செய்த விக்னேஷ் சிவன்.. கோபத்திலும் சிரிக்கும் நெல்சன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியாகி ...