சர்வைவர் நிகழ்ச்சிக்கு செல்கிறாரா டிடி? இணையத்தில் பரவும் பதிவுகள்!

பிரபல நடிகையும், விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆன திவ்யதர்ஷினி. இவரை ரசிகர்கள் டிடி என்று செல்லமாக அழைப்பார்கள். தற்போது டிடி, அந்தமானில் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியின் காபி வித் டிடி என்கின்ற நிகழ்ச்சியை பல ஆண்டுக்கும் மேலாக நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருப்பவர் தான் டிடி.

இவர் பல உச்சநட்சத்திர நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் போன்ற முன்னணி பிரபலங்களுடன் இந்த நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாடியவர். இவர் ‘எங்கிட்ட மோதாதே’ என்கிற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சி சீசன் 1 மற்றும் சீசன் 2 முடிவடைந்துவிட்டது. பொதுவாகவே இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ரசிகர் பட்டாளம் ஏராளம் உண்டு.

இவரிடம் ரசிகர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும், இன்ஸ்டாகிராமில் பதில் அளித்து வருவார். அந்தவகையில் ‘எங்கிட்ட மோதாதே’ அடுத்த சீசன் எப்போது வரும் என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார். எங்கிட்ட மோதாதே சீசன் 3 கூடிய விரைவில் வரவிருக்கிறது என்று தற்போது தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு டிடிக்கு கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதனால் நெடுநேரம் இவரால் நின்று கொண்டே இருக்க முடியாது. அதன் காரணத்தினால் சில முக்கியமான நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இவர் அந்தமானில் ஓய்வெடுக்க சென்று உள்ளதாக கூறியுள்ளார். இவர் அந்தமானில் இருக்கும் தகவலை அறிந்த ரசிகர் ஒருவர் சர்வைவர் நிகழ்ச்சிக்கு கெஸ்ட் ரோலாக அழைத்து உள்ளார்களா என்று கேட்டுள்ளார்.

இந்த கேள்வியை கேட்டு அதிர்ச்சியான டிடி, ‘எப்படியெல்லாமா யோசிப்பீங்க!’ என்று பதிலளித்துள்ளார். இதுபோன்ற பலவிதமான கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மறுக்காமல் அனைத்து கேள்விகளுக்கும் டிடியும் பதிலளித்து வருகிறார்.

சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாராவை, டிடி எடுத்த பேட்டி வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மகளை நடிகையாக்க துடிக்கும் VJ அர்ச்சனா.. மளமளவென வளர்ந்து ஹீரோயினாக மாறிவரும் புகைப்படம்

விஜே அர்ச்சனா சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் எனும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன் பிறகு இளமை புதுமை, கலக்கப்போவது யாரு, செலிபிரிட்டி கிச்சன் மற்றும் மிஸ்டர் மிஸஸ் சின்னத்திரை போன்ற ...