தற்போதெல்லாம் சேனல்களில் பலவிதமான ரியாலிட்டி ஷோக்களை மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வரும் சர்வைவர் என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ராந்த், நடிகை சிருஷ்டி டாங்கே, பெசன்ட் ரவி, அம்ஜத் கான், விஜே பார்வதி, லட்சுமி பிரியா, சிங்கப்பூர் ராப் பாடகர் லேடி காஷ், காயத்ரி ரெட்டி, உமாபதி ராமையா, நந்தா, விஜயலட்சுமி, இந்திரஜா சங்கர், சரண் சக்தி, நாராயணன் லக்கி, ராம் சி ஆகிய 16 போட்டியாளர்கள் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இன்னும் இரண்டு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் களமிறங்க உள்ளனர். 90 நாட்களுக்கு, இவர்களுக்கு தரப்பட கூடிய அனைத்து டாஸ்க்குகளிலும் சிறப்பாக விளையாடி சிறந்த போராளி (Survivor) என்று வெற்றி பெறுபவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் தங்களால் வாழ முடியும். சர்வைவர் (Survival) பண்ண முடியும் என்பதை நிரூபிக்க வேண்டுமாம். தற்போது போட்டியாளர்களை இரு அணியாகப் பிரித்து அடுத்த டாஸ்க் வழங்கியுள்ளனர். அதில் உணவு மற்றும் நெருப்பு போன்ற அத்தியாவசிய தேவைக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த டாஸ்க்கினால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று வருகிறது.

தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான சம்பளம் எவ்வளவு என்பதைப் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

அதாவது அர்ஜுன் சர்வைவர் நிகழ்ச்சிக்காக மொத்தம் 5 கோடி ரூபாய் பெற்றுள்ளாராம். அத்துடன் ஆக்சன் கிங் அர்ஜுன் தயாரித்து, அவருடைய மகள் நடிக்கும் படங்களையும் ஜீ தமிழ் வாங்கலாம் என்ற தகவலும் கசிகிறது.