சர்வதேச விருது வழங்கும் விழாவில்.. அசுர வேட்டையாடிய தனுஷின் அசுரன்!

இந்திய அளவில் மதிப்புமிக்க சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இன்னிலையில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த விருது விழா நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கோலிவுட் பிரபலங்கள் யார் யார் சைமா விருதை தட்டி சென்றுள்ளனர் என்பதை பார்ப்போம்.

சிறந்த இயக்குனருக்கான விருது, அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கு கிடைத்தது. அத்துடன் அசுரன் படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்த கென் கருணாசுக்கு சிறந்த அறிமுக நடிகர் விருது வழங்கப்பட்டது.

அதேபோல் அசுரன் படத்தில் இடம்பெற்ற ‘எள்ளு வய பூக்களையே’ பாடலை சிறப்பாக பாடியதற்காக பாடகி சைந்தவிக்கு சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றார். அத்துடன் அசுரன் படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கிடைத்தது.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாசுக்கு சிறந்த வில்லன் விருதும், அதே படத்தில் நடித்த ஜார்ஜ் மரியானுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்தது.

அதைப்போல் சிறந்த துணை நடிகைக்கான விருது மகாமுனி படத்தில் நடித்த இந்துஜா ரவிச்சந்திரனுக்கு கிடைத்தது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதனுக்கு கிடைத்தது .

மேலும் சிறந்த அறிமுக தயாரிப்பாளருகான விருது ஆடை படத்தை தயாரித்த வி ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றது. சிறந்த இசையமைப்பாளர் விருது, தல அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காக இமானுக்கு கிடைத்தது.

அதேபோல் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பிகில் படத்தில் வந்த ‘சிங்க பெண்ணே’ பாடலுக்காக விவேக் பெற்றார். இவ்வாறு சைமா விருது விழாவில் தொடர்ந்து நான்கு விருதுகளை வாங்கிக் குவித்த அசுரன் பட குழுவிற்கும், விருதுகளை வாங்கிய மற்ற தமிழ் சினிமா பிரபலங்களுக்கு கோலிவுட் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.