சர்தார் படத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகை.. கார்த்திக்குக்கு அதிர்ஷ்டம் இல்லை போல

நடிகர் கார்த்தியின் நடிக்கும் சர்தார் திரைப்படத்தை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில்,  நடிகை சிம்ரன் சர்தார் திரைப்படத்திலிருந்து விலகியதற்கான காரணங்கள் அரசல் புரசலாக வெளியாகி உள்ளது.

கார்த்தி சர்தார் திரைப்படத்தில் முதுமை, இளமை உள்ளிட்ட கதாபாத்திரங்களில் முதல் முறையாக நடித்து வருகிறார். இளமை கார்த்தி கதாபாத்திரத்துக்கு ஜோடியாக  நடிகை ரஜிஷா விஜயன் மற்றும் உள்ளிட்டோருடன் நாயகியாக நடித்த நடிகை ராஷிக்கண்ணா தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் சர்தார் திரைப்படத்தில் முதுமை கார்த்தி கதாபாத்திரத்தின் ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

அதன் பின்னர் சில நாட்களிலேயே அவருக்கு பதிலாக நடிகை லைலா இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் லைலா. இந்த நிலையில் நடிகை சிம்ரன் இந்த படத்தில் இருந்து விலகியதற்கு காரணம் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த சிம்ரன் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். முக்கியமாக நடிகர் மாதவன், பிரசாந்த், விக்ரம் உள்ளிட்டோருடன் நடித்து வருகிறார். அண்மையில் நடிகர் விக்ரமின் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மகான் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் அவரது கதாபாத்திரம் பிடிக்காததால் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிம்ரன் சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியதால் இந்த படத்தில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கியமாக சிம்ரனுக்கு இந்த படத்தில் சம்பளம் போதவில்லை என்றும் கூறுகின்றனர்.