சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நயன்தாரா.. சிம்புவிடம் தொடங்கி விக்னேஷ் சிவனிடம் தஞ்சம்

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரின் இந்த சாதனைக்கு பின்னால் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இவருடைய திரை வாழ்க்கையில் பல கிசுகிசுக்கள் வெளியானது.

நயன்தாராவின் முதல் சர்ச்சைக்குரிய உறவாக பார்க்கப்பட்டது சிம்புவுடனான காதல் தான். இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்த வல்லவன் படத்திலேயே மிக நெருக்கமான காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் நயன்தாரா சிம்புவுடன் டேட்டிங் செய்து வந்ததாக கிசுகிசுக்கள் வெளியானது.

மேலும் சிம்பு மற்றும் நயன்தாரா இவர்களுடைய முத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, அதுவே இவர்களது காதலுக்கு முடிவாக அமைந்தது. ஆனால் தற்போதும் சிம்பு தன்னுடைய படங்களில் நயன் சென்டிமென்ட்டை பார்த்து வருகிறார்.

இதற்கு அடுத்தபடியாக நயன்தாரா வில்லு படத்தில் நடித்ததன் மூலம் இப்படத்தின் இயக்குனர் பிரபுதேவாவிற்கும் இவருக்கும் கிசுகிசுக்கள் வரத் தொடங்கியது. இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும் செய்திகளும் வெளியானது. ஆனால் பிரபுதேவாவின் மனைவி ரமலத் இவருக்கு விவாகரத்து கொடுக்க சம்மதிக்கவில்லை. பின்பு இது பெரிய சர்ச்சையாக வெடித்தது.

அதன்பிறகு பிரபுதேவா 2011இல் தன் மனைவி ரமலத்திடம் இருந்து விவாகரத்து பெற்றார். அதன் பின்பு அடுத்த ஆண்டே நயன்தாரா, பிரபுதேவா இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் நயன்தாரா மூன்று வருடம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன்பிறகு தெலுங்கு சினிமாவின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

பல சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வந்து தற்போது பல படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருகிறார்கள். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் சமீபத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியும் சர்ச்சையானது.