சர்ச்சைகள் நிறைந்த எம் ஜி ஆரின் திருமண வாழ்க்கை.. ஜெயலலிதாவுக்காக செய்து கொடுத்த சத்தியம்

தமிழக அரசியல் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் அதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்த பல வரலாற்றுத் தலைவர்கள் இருக்கின்றனர். அப்படி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு தலைவர்தான் எம்ஜிஆர். ஒரு நடிகராக இவரை ரசித்த மக்கள் அரசியல் தலைவராக அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

அதற்கு முக்கிய காரணம் இவர் மக்களுக்காக அயராது உழைத்தார். அவர்கள் நலன் ஒன்றே முக்கியம் என்று பல திட்டங்களையும் கொண்டு வந்தார். இப்படி மக்களுக்கு பல நல்லதை வாரி வழங்கிய இவருடைய சொந்த வாழ்க்கை மிகவும் துயரம் நிறைந்தது. அதுமட்டுமல்லாமல் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல சர்ச்சைகளும் அப்போது இருந்தது.

அது என்னவென்றால் இவருக்கு மூன்று மனைவிகள். அதில் பார்கவி என்ற பெண்ணை இவர் முதலாவதாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமணம் மூன்று மாதம் கூட நீடிக்கவில்லை. அவரின் மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் சதானந்தவதி என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவரும் காச நோயினால் இறந்து விட்டார். அதன்பிறகு எம்ஜிஆர், ஜானகியை திருமணம் செய்து கொண்டார். ஜானகி ஏற்கனவே திருமணம் ஆனவர். இப்படி அவரைச் சுற்றி எப்போதும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருந்தது.

அதுமட்டுமல்லாமல் சினிமாவில் இவருடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த ஜெயலலிதாவை இணைத்தும் பல சர்ச்சைகள் வந்தது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்தது வெறும் நட்பும், அரசியல் ரீதியான உறவும் தான் என்கின்றனர் பலர்.

அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் அம்மாவுக்கு உங்களுடைய மரணத்திற்குப்பின் ஜெயலலிதாவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்து இருந்தார். அதனால் தான் அவர் இறுதிவரை ஜெயலலிதாவை தன்னுடன் வைத்து பார்த்துக் கொண்டார்.

இப்படி பல கல்யாணங்கள் செய்தாலும் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் மக்கள் அவரை கைவிடவில்லை. அதற்கு காரணம் இவர் மக்களுக்காக நேர்மையாக உழைத்தது தான். இதனால்தான் அவர் தமிழகத்தில் 3 முறை முதலமைச்சராக மக்களால் முடிசூட்டப்பட்டார்.