சரவணன் கேட்ட ஒரே கேள்வி.. பத்ரகாளியாக மாறிய ராஜா ராணி-2 சிவகாமி

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் மனைவி சந்தியாவின் போலீஸ் கனவை நிறைவேற்ற கணவர் சரவணன் துணிந்து விட்டான். இன்னிலையில் சரவணனின் அம்மா சிவகாமியின் சம்மதம் இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க தேவை என்பதை உணர்ந்த சரவணன் சிவகாமியிடம் சந்தியாவின் ஆசையை தெரியப்படுத்துகிறான்.

இதைக் கேட்டதும் சிவகாமி, ‘வேலைக்கே போக கூடாது என நினைத்துக்கொண்டிருக்க, போலீஸ் ஆக வேண்டும் என்பதற்கு நான் எப்படி ஏற்றுக் கொள்வேன்’ என சரவணனை சரமாரியாக திட்டுகிறாள். அதுமட்டுமின்றி சமையல் வீட்டு வேலையில் அரை குறையாக இருக்கும் சந்தியா, ஒரு மனைவியாக உனக்கு இதுவரை நடந்து கொண்டிருக்கிறாளா!

அப்படியிருக்கையில் இப்பொழுது போலீசாக வேண்டும் என கிளம்பி இருக்கிறாள் என சந்தியாவை சரவணன் முன்பே சிவகாமி தரக்குறைவாக பேசுகிறார். அத்துடன் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற சிவகாமி, போலீஸ் கனவை சந்தியா மற்றும் சரவணன் இருவரும் மறந்துவிட வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

எனவே இதைக் கேட்ட சரவணன் அம்மாவை சமாதானப்படுத்த இனி வரும் நாட்களில் நேரத்தை செலவிட போகிறார். இந்த சமயத்தை சீரியலில் இயக்குனர் சரியாக பயன்படுத்தி நிஜவாழ்க்கையில் ஆலியா மானசா கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரது பிரசவத்திற்குப் பிறகு ஐபிஎஸ் ட்ரைனிங் முடித்த கம்பீரமான போலீசாக சந்தியாவை மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க வைக்கப் போகிறார்.

அதுமட்டுமின்றி குழந்தை பிறந்த பிறகு ஓய்வில் இருக்கும் ஆலியா மானசா, சீரியலில் காட்டப்படாமல் இருப்பதற்காக, அவர் போலீஸ் ட்ரைனிங் செல்ல சரவணன் வீட்டில் இருப்பவர்களிடம் எதிர்த்து சந்தியாவை ட்ரெய்னிங்கிற்க்கு அனுப்ப போகிறான்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சந்தியாவின் கனவை புரிந்துகொண்டு சிவகாமியும் மனம் மாறப் போகிறார். இதெல்லாம் இனி வரும் நாட்களில் ராஜா ராணி2 சீரியலில் நிகழப்போகிறது.