இந்திய திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது நட்சத்திர ஜோடிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து தான். இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். கடந்த நான்கு ஆண்டுகளாக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்து விட்டதாக இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா, நாக சைதன்யா இருவருமே திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள். இவர்களின் விவாகரத்துக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் பிரிவதற்கு இந்த பாலிவுட் நடிகர் தான் காரணம் என பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.

எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையான பதிவை செய்து வரும் கங்கனா இந்த முறையும் அப்படியே செய்துள்ளார். ஆனால் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக தாக்கியுள்ளார். இதுகுறித்து கங்கனா கூறியுள்ளதாவது, “கடந்த நான்கு ஆண்டுகளாக தனது மனைவியுடன் நெருக்கமாக வாழ்ந்து வந்த அந்த தென்னிந்திய நடிகர் அவரது மனைவியை விவாகரத்து செய்ய இந்த பாலிவுட் நடிகர் தான் காரணம்.

இந்த நடிகரும் பாலிவுட்டில் விவாகரத்து நிபுணர் தான். அந்த பாலிவுட் நடிகருடன் நாகசைதன்யா தற்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இருவரும் நெருக்கமானதை அடுத்து சமந்தா விவகாரம் குறித்து அவர் அறிவுரை கூறியதாலே நாக சைதன்யா தனது மனைவியை பிரிய முடிவு செய்தார்” என கங்கனா ரனாவத் குறிப்பிட்டுள்ளார்.

நாக சைதன்யா தற்போது ஹிந்தியில் நடிகர் அமீர்கானுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் நடிகர் அமீர்கான் சமீபத்தில் அவரது மனைவியை விவாகரத்து செய்தார். எனவே கங்கனா ரனாவத் நடிகர் அமீர்கானை தான் மறைமுகமாக கூறியுள்ளார் என்பது மிகவும் தெளிவாக புரிகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.