சமந்தா திருமணத்துக்கு ஆன செலவு தெரியுமா? மேடைக்கு மட்டும் இத்தனை கோடி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவை சுற்றி சமீபகாலமாக பல சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன. சமந்தா தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். 4 வருடங்களாக வாழ்ந்து வரும் இவர்கள் இன்னும் சில நாட்களில் பிரிந்து போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இதற்கு சமந்தா தரப்பினரும், நாகசைதன்யா தரப்பினரும் முதலில் மௌனம் காத்த நிலையில் கட்டுக்கடங்காமல் வதந்திகள் பரவுவதால் வேறுவழியின்றி வாயைத் திறந்தார். சமந்தா எனக்கும் நாக சைதன்யாவிற்கும் எந்த கருத்தும் கிடையாது. நாங்கள் இருவரும் ஒன்றாகதான் வாழ்ந்து வருகிறோம் என வெளிப்படையாக கூறியிருந்தார்.

அதன் பிறகு நாகசைதன்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா வாழ்க்கை, வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு வீட்டிற்கு வந்தால் சினிமாவைப் பற்றி நாங்கள் பேசிக் கொள்ள மாட்டோம் இதனை என் தந்தையிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன் என கூறியிருந்தார். இதை பார்க்கும்போது நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரிவதில்லை என்பது உறுதியானது.

ஆனால் இருப்பினும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாகரத்து சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் சமந்தா அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் தேவையில்லாமல் கோபப்படுவது போல புகைப்படங்களை வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய தான் தற்போது வரை இந்த வதந்திக்கு காரணம் என பலரும் கூறி வருகின்றனர்.

தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் மிக பிரம்மாண்டமாக தனது திருமண செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட இவர்கள் இருவரும் அமர்ந்திருந்த மேடை 10 கோடிக்கு மேல் செலவு செய்து பிரம்மாண்ட முறையில் திருமணம் நடந்ததாக கூறி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக திருமணத்திற்கு மட்டுமே 25 கோடிக்கு மேல் செலவு செய்ததாக கூறி வருகின்றனர்.