சமந்தாவுடன் விவாகரத்து.. நாக சைதன்யா கூறிய பதில் என்ன தெரியுமா.?

நடிகை சமந்தா அவரது கணவர் நடிகர் நாகசைதன்யா அவர்களின் விவகாரத்து பற்றி முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார் நடிகர் நாக சைதன்யா. தெலுங்கு முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. இவரும் நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் சமந்தா திரைப்படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சகுந்தலம் ஆகிய படங்களை கையில் வைத்துள்ளார். நடிகை சமந்தாவும் அவரது கணவர் நடிகர் நாக சைதன்யாக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒரே அபார்ட்மெண்டில் வேறு வேறு வீட்டில் வசிக்கிறார்கள்.

இருவரும் பிரிய போகிறார்கள் என வதந்தி வெகுநாட்களாக சமூக வலைத்தளங்களில் உலாவுகிறது. சமீபத்தில் திருப்பதி வந்த சமந்தாவிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது பதில் அளிக்காமல் கோபப்பட்டார்.

நடிகர் நாகார்ஜுனா அவரது தந்தை பிறந்த நாளின் போது ஒரு டிவிட் போட்டு இருந்தார் ஹாப்பி பர்த்டே நானா அதற்கு ரீட்வீட் செய்த சமந்தா சோ பியூட்டிஃபுல் என்று கூறியிருந்தார். பின்பு அதை டெலிட்  செய்துவிட்டு சோ பியூட்டிஃபுல் அங்கிள் என ரீட்வீட் செய்தார். இதன் மூலம் இவர்களது விவாகரத்து பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்போது நாக சைதன்யாவும் இந்த விவகாரம் குறித்து மனம் திறந்துள்ளார். சமீபத்திய பேட்டியில் இதுபற்றி பேசியுள்ளார் நான் சிறுவயதிலிருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்ந்தவன். இந்த பழக்கம் என்னுடைய தாய், தந்தையிடமிருந்து எனக்கு வந்தது. அவர்கள் இருவரும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர் சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் அதை கடைபிடித்து வருகிறேன்.

சமந்தா உடனான கருத்து வேறுபாடு என்ற செய்தி பரவி வருகிறது. எனக்கு மிகுந்த வேதனை இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க, இன்னொரு செய்தி உடனே வந்துவிடுகிறது.  ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு சேதி மிகவும் பரபரப்பாக பேசப்படும் இதனால் செய்திகள் மறந்துவிடுகின்றனர்.

இந்த புரிதல் எனக்கு வந்த உடன் நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார். இதிலிருந்து நாகசைதன்யா,சமந்தா இவர்களிடையே விவகாரத்து வதந்திக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்தனர்.

ரெண்டே நாளில் நொறுங்கிப் போய் விட்டேன்.. நெட்டிசன்களை விளாசிய குக் வித் கோமாளி பிரபலம்!

சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி என்கின்ற சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சி தனி இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், ...