சமந்தாவுக்கு வந்த பெரிய வாய்ப்பு.. கெடுத்து விட்ட நாக சைத்தன்யா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் சமீபத்தில் தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல நாட்களாகவே இந்த வதந்தி சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வழக்கம் போல் இதுவும் வதந்தியாகவே சென்றுவிடும் என பலரும் நினைத்தனர். ஆனால் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் தரும் வகையில் இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதற்கு முழுக்க முழுக்க காரணம் சமந்தா சமீபகாலமாக நடிக்கும் படங்களில் அளவுக்கதிகமாக கிளாமர் வேடங்களில் நடித்து வருவது தான் எனவும் இதனால் நாகசைதன்யா குடும்பத்தினருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் எப்போதுமே உண்மை காரணத்தை வெளியில் சொல்லாதது வழக்கம் தானே.

இந்நிலையில் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் ஒன்றாக இருந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் படத்தில் வாய்ப்பு கிடைத்ததாம். நயன்தாராவுக்கு பதில் முதலில் ஹீரோயினாக சமந்தாவை கேட்டாராம் அட்லி.

ஆனால் அந்த நேரத்தில் தனக்கு வாரிசு வேண்டும் என நாக சைத்தன்யா அடம் பிடித்ததால் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் சமந்தா. ஆனால் இப்படி இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுவார்கள் என நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

இதனால் மிகப்பெரிய பட வாய்ப்பு கை விட்டு போய்விட்டதே என நினைத்து தற்போது வருத்தப்படுகிறாராம் சமந்தா. என்னதான் ஏகப்பட்ட பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தாலும் ஷாருக்கான் போன்ற முன்னணி நடிகரின் படத்தில் நடித்தால் தானே அங்கேயும் கல்லா கட்ட முடியும். இருந்தாலும் ஒரு வாரத்திற்குப் பிறகு கைவசம் பல படங்கள் வைத்து நடித்து வருகிறார் சமந்தா.