சமந்தாவுக்கு அட்வைஸ் வழங்கிய பிரபல நடிகை.. அட இவங்க விவாகரத்தில எக்ஸ்பெர்ட் ஆச்சே

பொதுவாகவே மீடியாவிற்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் பேசுவதற்கு ஏதாவது ஒரு டாப்பிக் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவரின் சொந்த பிரச்சனையை கூட சமூக பிரச்சனையாக மாற்றி பேசுவதில் நாம தான் எக்ஸ்பெர்ட் ஆச்சே.

அப்படி ஒரு பிரச்சனை தான் கூற சில நாட்களாகவே அனைத்து மீடியாக்களிலும் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அது என்னவென்று உங்களுக்கே தெரிந்திருக்கும். அதாங்க நம்ம சமந்தா விவாகரத்து செய்தி. அவங்க புருஷன அவங்க விவாகரத்து பண்றாங்க. ஆனா என்ன காரணத்துக்காக விவாகரத்து பண்றாங்கனு நம்மாளு ஒரு விவாதம் நடத்தறாங்க பார்த்தீங்களா அதாங்க தாங்க முடியல.

இதெல்லாம் பார்த்து கடுப்பான சமந்தா ஒரு ஆண் விவாகரத்த அறிவிச்சா அதை கண்டுக்காம போற சமூகம் அதையே ஒரு பெண் அறிவிச்சா மட்டும் ஏன் ஒரு பேசு பொருளா மாற்றி பெரிய பிரச்சனையா உருவாக்கறீங்கனு கேள்வி கேட்டிருக்காங்க. அட அவங்க கேட்கறதும் நியாயம் தானங்க.

சமந்தாவோட இந்த குமுறல் யாருக்கு புரிஞ்சதோ இல்லையோ நம்ம வனிதா அக்காவுக்கு புரிஞ்சிடுச்சுங்க. உடனே சமந்தாவுக்கு ஆதரவா ஒரு பதிவு ஒன்னு போட்டிருக்காங்க. அவங்க என்ன சொல்லிருக்காங்கனா, “இங்கு சமூகம் என்று எதுவுமில்லை பேபி. உன் வாழ்க்கையை நீ வாழு.

மக்கள் நாம போடுற போட்டோஸ மட்டும் தான் பார்ப்பாங்க. சமயத்துல வீடியோவும் தான். கவலை படுறதுக்கு எதுவுமில்லை. நீ உன் வாழ்க்கையை நோக்கி முன்னாடி போய்கிட்டே இரு. உனக்கு இன்னும் வலிமை கூடும்” அப்படினு சொல்லிருக்காங்க. அது சரி வனிதா அக்கா சொன்னா சரியா தான இருக்கும். ஏன்னா இவங்க பார்க்காத பிரச்சனையா?