சன் பிக்சர்ஸுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த 5 படங்கள்.. ரஜினியை வைத்து கல்லா கட்டிய மாறன்

மிகக்குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனது ஆதிக்கத்தை படைத்த தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ். சன் நெட்வொர்க்கின் துணை நிறுவனமான சன் பிக்சர்ஸின் நிறுவனர் கலாநிதிமாறன். இந்நிறுவனம் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளது. அதில் டாப் 5 பிளாக்பஸ்டர் படங்களை பார்க்கலாம்.

அயன் : கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா, பிரபு மற்றும் பலர் நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அயன். இப்படத்தை ஏவிஎம் புரோடக்சன் தயாரிக்க சன் பிக்சர்ஸ் விநியோகம் செய்து இருந்தது. 2009 ஆம் ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டான படம் அயன்.

சிங்கம் : ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிங்கம். இப்படத்தை ரிலையன்ஸ் பிக்சர்ஸ், ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரித்திருந்தது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் விநியோகம் செய்து இருந்தது. சிங்கம் படம் வசூலில் வேட்டையாடியதால் இப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் எடுக்கப்பட்டது.

எந்திரன் : ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றிபெற்று தென்னிந்தியப் படங்களின் நான்காவது இடத்தை பிடித்தது. மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

மங்காத்தா : வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. இப்படத்தின் திரையரங்கு உரிமையை சன் பிக்சர்ஸ் பெற்றது. இப்படம் எந்திரனுக்கு அடுத்தபடியாக அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள்.

பேட்ட : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பேட்ட. இப்படத்தில் ரஜினி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை வாரி குவித்தது. மேலும் இப்படத்தில் இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்தும் பாராட்டப்பட்டது.