தொடக்கத்தில் தொகுப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய விஜே தீபக், அதன்பிறகு சீரியல்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு புதிதாக ஒளிபரப்பாக கூடிய சீரியல் ‘தமிழும் சரஸ்வதியும்’. இந்த சீரியலில் நடிகர் தீபக் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நாடகத்தில் தமிழ் என்ற கதாபாத்திரம் தனக்கு அவ்வளவு படிப்பறிவு இல்லாத காரணத்தினால் தனது மனைவியாவது நன்கு படித்து இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்.

ஆனால் விதி யாரை விட்டது, தமிழ் சீரியல் என்றாலே எதிர்பார்ப்பது முழுவதுமாக நடக்காதே. அதனால் இவர் காதலிக்கும் பெண்ணோ, 12ஆம் வகுப்பையே தாண்டுவதற்கு படும் பாடுபடுவார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மத்தியில் காதல் மலரும். எவ்வாறு தடைகளை வென்று வாழ்க்கையில் இணைகின்றனர் என்பதே இந்த சீரியலின் கரு.

இந்த கதையை தற்போது வரை மிகவும் சுவாரசியமாக நகர்த்திச் செல்கின்றனர். நடிகர் தீபக் சன் டிவியில் ஒளிபரப்பாகிய தென்றல் என்ற நாடகத்தில் நடித்தவர். இந்த நாடகம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்டது.

தற்போது பலருக்கும் நினைவில் வரக்கூடிய ஜோடிதான் தமிழ்-துளசி. இவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் அக்காலகட்டத்தினரை மிகவும் கவர்ந்தது. இந்த தென்றல் சீரியலுக்கு பெரும் ரசிகர் கூட்டமே அப்போது இருந்தது.

தற்போது 42 வயதிலும் ரொமான்ஸ் குறையாமல் தமிழும் சரஸ்வதியும் என்ற இந்த நாடகத்தில் மிகவும் அழகாக வெளிக்காட்டி அந்த தென்றலில் வந்த தமிழை நினைவூட்டுகிறார் நடிகர் தீபக். தமிழ் மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரும் தங்களின் காதலை மிகவும் அழகாக பகிர்ந்து வருகிறார்கள்.

வார்த்தைகளால் வெளிப்படுத்த வில்லை என்றாலும் கண்களால் வெளிப்படுத்தி விட்டார்கள். இதனால் இந்த வார எபிசோட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும் என்றும் ரசனை மிகுந்த காட்சிகள் இடம் பெறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.