சந்தி சிரிக்க போகும் குடும்ப பஞ்சாயத்து.. மரண பயத்தை காட்டிய தனுஷ்

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக சோசியல் மீடியாவில் அறிவித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டு விசயம் என்பதால் இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. தற்போது வரை இவர்களின் விவாகரத்து செய்தி மீடியாவில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

தனுஷின் இந்த முடிவுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கருத்து வேறுபாடு தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த இரு குடும்பத்தினர் எடுத்த முயற்சிகளும் தோல்வியையே தழுவியது.

அப்போதிலிருந்தே ரஜினி குடும்பத்தினர் தனுஷுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். தனுஷ் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதால் அவர் படங்களை யாரும் தயாரிக்க கூடாது அவருக்கு எந்த பட வாய்ப்பும் வரக்கூடாது என்று ரஜினியின் மனைவி மறைமுகமாக சில வேலைகளை செய்ததாக தகவல்கள் வெளியானது.

ஆனால் தனுஷ் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தனுஷ் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட ரஜினியின் குடும்பத்தார் அவருடைய படத்தில் எந்த ஒரு டெக்னீசியன்களும் வேலை செய்யக்கூடாது என்று சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியுள்ளனர்.

இதனைப் பார்த்த தனுஷ் இனி மேலும் பொறுமையாக இருந்தால் சரியாக வராது என்று முடிவு செய்துள்ளார். அதனால் அதிரடியாக ரஜினியின் குடும்பத்தாரிடம் இனிமேலும் எனக்கு நீங்கள் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்தால் நான் ஓபனாக பிரஸ்மீட் வைத்து அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக போட்டு உடைத்து விடுவேன்.

அப்படி நான் பல உண்மைகளை கூறினால் பாதிக்கப்படுவது நீங்களாக தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால் ரஜினியின் குடும்பத்தினர் நாம் இவ்வளவு நாள் மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வந்தோம் ஆனால் இவர் ஓபனாக பிரஸ் மீட் வைத்து குடும்ப பஞ்சாயத்து பப்ளிக்காக தெரிவிக்கும் மனநிலையில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால் ஐஸ்வர்யா குறித்து சில நாட்களாகவே பல சர்ச்சையான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதனால் நம் பெயரை நாமே கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்த அவர்கள் தற்போது தனுஷின் பக்கம் செல்லக் கூடாது என்று முடிவு செய்துள்ளனர். இதெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது விஷயம் ரொம்ப பெருசா இருக்கும் போல என திரையுலகில் தற்போது பேசி வருகின்றனர்.