சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய திரைப்படம் சந்திரமுகி. அது மட்டுமில்லாமல் பல திரையரங்குகளில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஓடியது.

ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, நாசர், நயன்தாரா, ஜோதிகா போன்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களும் முத்திரை பதிக்கும் அளவுக்கு அமைந்தன. தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய பி வாசு தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஆனால் ரஜினிகாந்துக்கு பதிலாக சந்திரமுகி 2 படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பேய்க்கும் அவருக்கும் நல்ல கனெக்சன் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் இயக்குனர் பி வாசு.

இந்த வருட இறுதியில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி அடுத்த வருடத்தில் படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாம். முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய வடிவேலுதான் இரண்டாம் பாகத்திலும் நகைச்சுவை நடிகராக நடிக்கவுள்ளாராம்.

அத்துடன் இந்த படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார். முதல் பாகத்தில் நடித்த ஜோதிகாவிற்கு பதிலாக அல்லது நயன்தாராவிற்கு ஈடாக இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா நடக்கவும் பேச்சி வார்த்தை நடக்கிறது. மேலும் ரஜினியும் கெஸ்ட் ரோலில் வேட்டையனாக நடிக்க இருப்பதாக தெரிகிறது.

அத்துடன் மீண்டும் உருவாக இருக்கும் சந்திரமுகியின் இரண்டாவது பாகத்திற்கான தகவல்கள் எல்லாவற்றையும் நெட்டிசன்கள் தங்களது மீம்ஸ்கள் மூலமாக சமூக வலைதளங்களில் உலாவ விடுகின்றனர்.