சந்தானம் சொதப்பிய சூப்பர் ஹிட் பாடல்.. அதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாம்

கமல்ஹாசன் நடிப்பில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மைக்கேல் மதன காமராஜன். இதில் நடிகர் கமலஹாசன் நான்கு மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பார். அவருடன் நடிகைகள் குஷ்பு, ஊர்வசி, ரூபிணி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தின் கதை மற்றும் வசனங்களை கமல்ஹாசன் மற்றும் கிரேசி மோகன் அவர்களும் இணைந்து எழுதியுள்ளனர். இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கொண்டாடிய படமாகும். இத்திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களால் இசையமைக்கப்பட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அதில் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி இணைந்து பாடிய பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் என்ற பாடலுக்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை குஷ்பூ அவர்கள் சிறப்பாக நடனமாடி இருப்பார்கள்.

அப்பாடல் காட்சியில் நடனமும், காமெடியும் கலந்து படமாக்கப்பட்ட விதமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த பாடலானது தற்பொழுது சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா என்ற திரைப்படத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

அப்பாடல் காட்சியில் சந்தானம், அனகா மற்றும் பலர் நடனம் ஆடியுள்ளனர். இப்பாடல் தற்பொழுது யுவனின் இசையால் ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தாலும் நடன அமைப்பு  உலகநாயகன் அளவிற்கு ரசிகர்களை ஈர்க்க வில்லை என்பதே உண்மையாகும்.

உலகநாயகன் அளவிற்கு முகபாவனைகள் இல்லை அதையும் தாண்டி  கொஞ்சம் கூட செட்டாகாது அளவிற்கு நடனம் இருந்தது. பாடல் வரிகள் மற்றும் இசையை வைத்து தற்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. 90’ஸ் கிட்ஸ்களின் விருப்ப பாடலில் இப்பாடலும் ஒன்று என்பதை நாம் மறுக்க இயலாது. பழசு பழசுதான் என்பதற்கு இப்பாடலும் ஒரு சிறந்த உதாரணமாகும்.